Pages

Tuesday, July 19, 2011

மனைவி வாங்கலையோ மனைவி...!!! கிழட்டு பயலுக்கு விசேட தள்ளுபடி

மானங்கெட்ட மனிதர்களால் இன்று மனிதவிழுமியங்கள் இல்லாத புதிய சமுதாயம் ஒன்று தோற்றம் பெற்று வருகின்றது. இப்படிப்பட்ட மானம்கெட்ட மனிதர்களின் செயல் ஒன்றே கீழே தரப்படுகிறது.

இலங்கை திருகோணமலை மொறவௌ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகதிவுல்வௌ பகுதியில் தான் திருமணம் செய்த மனைவியை 65 வயதுடைய முதியவருக்கு எட்டாயிரம் ரூபாய்க்கு விற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.



என்ன கறுமம் என்று பார்க்கிறீர்களா..... மகதிவுல்வௌ பகுதியைச்சேர்ந்த 65 வயதுடைய முதியவர் தான் திருமணம் செய்து கொள்ள பெண் வேண்டுமென ஒருவரிடம் கேட்டிருக்கிறார்.35 வயதுடைய அந்நபர் வெறும் 8000 ரூபாய்க்கு மனைவியை கூட்டிக் கொடுத்துள்ளார்.

தான் வெளியூர் செல்லப்போவதாயும்,  திரும்பி வரும் வரை வயோதிபரின் வீட்டில் இருக்கும் படியும் கணவரால் மனைவிற்கு கூறப்பட்டது. பின்னர் இரண்டு நாட்கள் வயோதிபரின் வீட்டில் தங்கிவிட்டு தான் வீட்டுக்கு செல்ல முற்பட்ட வேளை வயோதிபர் வீட்டின் கதவுகளை பூட்டி விட்டு வீடு செல்ல அனுமதிக்கவில்லை.

எட்டாயிரம் ரூபாய் கொடுத்து உண்னை வாங்கியுள்ளேன்.வீட்டுக்கு செல்ல அனுமதிக்க மாட்டேன் என வயோதிபரிடமிருந்து பதில் கிடைத்தது. இது சம்மந்தமாக மொறவௌ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிழடுக்கு உயிர் நாடி அடங்கிப்போய் இருந்ததால் பெண்ணின் கற்புக்கு ஒன்றும் ஆகவில்லை.

ஆனால் கிழடு ஏன் பணம் கொடுத்து பெண்ணை வாங்கியது என தெரியவில்லை. கிழவனுக்கு வந்த நப்பாசையை பாத்தீர்களா...???

No comments:

Post a Comment