Pages

Saturday, July 23, 2011

பின்னால் சொறிவதுக்குமா சிலை வைப்பாங்க...!!! - படங்கள் இணைப்பில்

பெரியார்களுக்கு சிலை வைத்து கேள்விப்பட்டு இருக்கிறோம், ஓர் டென்னிஸ் வீராங்கனை பின்னால் சொறிவதற்கு சிலை வைத்து கேள்விபட்டிருக்கிறீர்களா??? Fiona Walker எனும் டென்னிஸ் வீராங்கனை 30 வருடங்களுக்கு முன்னர் எதேட்சையாக பின்னால் சொறிந்தபோது எடுக்கப்பட்ட படத்துக்கு தற்போது சிலை வடித்துள்ளார்கள்.

30 வருடங்களுக்கு முன்னர் பிரபல டென்னிஸ் வீராங்கனையாக இருந்தவர் தான் இந்த ஃபியானா வோக்கர். இவர் தனது ஆண் நண்பர் மார்ட்டீன் எல்லியொட் பயிற்சியில் ஈடுபட்டபோது அவரால் தற்செயலாக எடுக்கப்பட்டதே இந்த சொறியும் காட்சி...


1976 இல்  ஃபியானா வோக்கருக்கு 18 வயதாக இருக்கும்போது எடுக்கப்பட்ட இப் புகைப்படத்தின் ஒரு மில்லியன் பிரதிகளை விற்றதன் மூலம்  ஃபியானா வோக்கரின் காதலர் மார்ட்டீன் எல்லியொட் அந்நாளில் சுமார் 250000 பவுன்ஸ்களை இலாபமாக பெற்றார்.

ஃபியானா வோக்கர் 18 வயதில்

30 வருடங்களின் பின்னர் பென் டியன்ட்லி எனும் சிற்பக்கலைஞரின் கண்களில் இப் படம் மாட்டிவிட தற்போது 48 வயதாகும் ஃபியானா வோக்கரின் அனுமதியுடன் உயிர் மாடலின் உதவியுடன் சுமார் 7மாத உழைப்பில் இச் சிலையை உருவாக்கியுள்ளார்.



பைபர் இழையின் உதவியுடன் உடல்க்கட்டமைப்பை அமைத்து, பின்னர் மெருகூட்டி தங்க நிற தீந்தை பூசி சிலையை அழகுற அமைத்துள்ளார். அச் சிலையின் அழகால் கவரப்பட்ட ஃபியானா வோக்கர் அச் சிற்பியை புகழ்ந்துள்ளார்.


தற்போதைய ஃபியானா வோக்கர்

இந்தப்படத்தை பல மில்லியன் பவுன்ஸ்கள் கொடுத்து யாராவது ஓர் இளிச்சவாயன் வாங்குவான் என்ற நம்பிக்கையில் பென் டியன்ட்லி காத்திருக்கிறார்.

ஆனா இந்த கறுமத்துக்கெல்லாம் தமிகழன் ஏமாற மாட்டான்.


No comments:

Post a Comment