Skype இல் உலா வந்த ஒளவையார் அங்கே முருகப்பெருமானை சந்திக்கிறார்.
முருகன்:
செந்தமிழ் சொல்லெடுத்து அழகுற பிளாக்கரில் தொகுத்தளிக்கும் ஒளவையே! அரியது எது??
ஒளவை:
அரியது கேட்பின் வரிவடிவேலோன்,
அரிது அரிது செந்தமிழில் பதிவிடுதல் அரிது !
செந்தமிழ் ஆயினும் எழுத்துப்பிழையற பதிவிடுதல் அரிது!
எழுத்துப் பிழையறப் பதியினும் அதற்கு கவர்ச்சியாய் பெயரிடுதல் அரிது!!
கவர்ச்சிப் பெயரிடினும் வாசகர்களை கடுப்பாக்காமல் இருத்தல் அரிது!!
கடுப்பாகாமல் இருப்பினும் வாசகர்கள் பின்னூட்டமளித்தல் அரிது !!
முருகன்:
அரியது கேட்டமைக்கு அழகாக தமிழிலில் விளக்கம் தந்த முதாட்டியே! கொடியது என்ன ??...
ஒளவை:
கொடியது கேட்பின் வரிவடிவேல்லோன்,
கொடிது கொடிது எம் பதிவை வேறோருவன் திருடுவது கொடிது !!
அதனிலும் கொடிது திருடியவன் அதிக Hits பெறல் !!
அதனிலும் கொடிது அலெஸ்சா ராங்கில் அவன் எம்மை புறம்தள்ளிவிடல்!!
முருகன்:
அவ்வையே!! உலகப் பதிவர்கள் உந்தன் வார்த்தைக்கு அடிமையாகி விடுவர் என்றால் அதில் வியப்பில்லை!! இனியது என்ன??
ஒளவை:
இனியது கேட்கின் தனி நெடு வேலோய்
இனிது! இனிது! திரட்டி இனிது !!
அதனிலும் இனிது தமிழ்மணம் !!
அதனிலும் இனிது தமிழ் 10 !!
அதனிலும் இனிது தமிழ் இன்ட்லி தானே !!
முருகன்:
அரியது , கொடியது , இனியது அனைத்திற்கும் உரையோடு விடைவு கண்ட அவ்வையே !!
புதியது என்ன??
ஒளவை:
என்றும் புதியது !! கூகுல் குறோம் என்றும் புதியது !!
பயன் நிறைந்த குறோம் என்றும் புதியது !!
முருகன்:ஸப்பா! இப்பவே கண்ணை கட்டுதே.....!!! ஒளவையே பேஸ்புக்கில் நான் உலவலாவ இருப்பதால் நான் சென்றுவருகிறேன்.
ஒளவை:
முருகா எனது வலைப்பூவில் மறக்காமல் பின்னூட்டம் இட்டுவிட்டு சென்றுவிடு...!!!

மிக நன்றாக இருந்தது. கொஞ்சம் கூடுதல் எழுதியிருக்கலாம்
ReplyDeleteநன்றி JK
ReplyDeleteஒளவையின் பாடலில் தெரிந்தது இவ்வளவு மட்டும் தான் நண்பா...!!!