Pages

Thursday, July 14, 2011

வீரர்களின் உடல் பசி தீர்க்க SEX பொம்மைகள் வழங்கிய கிட்லர் - படங்கள் இணைப்பில்

நாஜி படை வீரர்களுக்கு செக்ஸ் பொம்மைகளை வழங்க ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் ரகசியமாக உத்தரவிட்டது தற்போது அம்பலமாகியுள்ளது.




குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவர்ந்திழுக்கும் பொம்மை ‘பார்பி’. அமெரிக்காவின் மேட்டல் நிறுவனத்தின் தயாரிப்பு. 1959-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பொம்மை புதுப்புது டிசைன்களில் தற்போதும் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விற்கப்படுகிறது.




பார்பி பொம்மையின் வரலாறு, அது உருவான விதம் தொடர்பாக கிரேம் டொனால்டு என்ற எழுத்தாளர் ஆராய்ச்சி செய்து வந்தார். 

இதற்காக உலகம் முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் உருவாக்கப்பட்ட பலவிதமான பொம்மைகள் பற்றிய தகவல்களை சேகரித்தார். அப்போது ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் பற்றிய சுவாரஸ்ய தகவல் அவருக்கு கிடைத்தது. இதை ‘முசோலினிஸ் பார்பர்’ என்ற புத்தகத்தில் அவர் எழுதியுள்ளார். 


ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர்

அதில் டொனால்டு கூறியிருப்பதாவது: 2-ம் உலகப் போருக்காக ‘ஷட்ஸ்டாபல்’ என்ற படை பிரிவை ஹிட்லர் உருவாக்கினார். இந்த படையினர் உலகின் பல நாடுகளிலும் போரிட்டனர். 

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஜெர்மனி வீரர்கள் பார்களிலும் இரவு விடுதிகளிலும் அதிகம் சுற்றுவதாக படை தளபதி ஹென்ரிச் ஹிம்லர் என்பவர் ஹிட்லருக்கு தகவல் அனுப்பினார்.

விபசார அழகிகள், பெண்களிடம் வீரர்கள் செல்வதை தவிர்க்கும் வகையில் ஆளுயர செக்ஸ் பொம்மைகள் தயாரித்து வீரர்களுக்கு வழங்க ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

படை தளபதி ஹென்ரிச் ஹிம்லர்

செக்ஸ் பொம்மை தயாரிக்க போஸ் கொடுக்குமாறு ஹங்கேரி நடிகை கேத் வான் நாகி என்பவரிடம் முதலில் பேசப்பட்டது. அவர் மறுத்துவிட்டதால் தோராயமான அளவுகளில் பொம்மை தயாரிக்கப்பட்டது. 

ஹங்கேரி நடிகை கேத் வான் நாகி

‘போர்கில்டு பிராஜக்ட்’ என்ற பெயரில் இந்த வேலைகள் நடந்தன. ஆளுயர அளவுக்கு இல்லாமல் சற்று சிறிய அளவில் ‘ஜினாய்ட்ஸ்’ பொம்மைகள் தயாரிக்கப்பட்டன.

நவீன கால சிலிக்கன் SEX பொம்மை

ஆர்தர் ரிங்க் என்பவர்தான் பொம்மையை டிசைன் செய்தார். இரண்டு ஆண்டில் இத்திட்டம் நிறுத்தப்பட்டது. ஜெர்மனியின் டிரெஸ்டன் நகரில் குண்டுவீசப்பட்டதில், இத்திட்டம் தொடர்பான பெரும்பாலான ஆதாரங்கள் அழிந்தன.



இதுபோன்ற பொம்மைகளின் அடிப்படையிலேயே பார்மி பொம்மை உருவாக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு டொனால்டு கூறியுள்ளார்.

Barbie பொம்மைகள்




யப்பானிய SEX பொம்மைகள் பற்றிய Video கீழே.



No comments:

Post a Comment