Sunday, July 17, 2011

முந்தினவனுக்கு வாய்ச்சது மூதேவி, பொறுத்திருந்தவனுக்கு கிடைச்சுதாம் கிளிக்குஞ்சு...!!!


இது என்ன தலையங்கம் எண்டு பாக்கிறியளோ.... எல்லாம் ஆண்கள் படுற பாட்டைப்பத்தித்தானுங்கோ.... அண்டைக்கு யாழ்ப்பாண கல்லூரி ஒன்டின்ட வாத்தியார் சொல்லுரார், அவர் கம்பேசுல படிக்கேக்க அவரின்ட வகுப்பில அழகான பெட்டை ஒன்டு படிச்சவளாம். இவரின்ட பிரெண்டு ஒரால் அவள எப்படியோ லவ் பண்ண வச்சுப்போட்டானாம். அதுக்கு பிறகு “எப்படி மச்சான் அவள கரெக்ட் பண்ணிப்போட்டன் பாத்தியளோ” என்டு பிலிம் காட்டுவாராம்...

இவையளும் அவன் அதிர்ஷ்டக்காரன் என்டு நினைச்சுக் கொண்டிச்சினமாம். பிறகு இரண்டு பேரும் கலியாணம் முடிச்சுப்போட்டுத்தான் வீட்ட போய் நின்டவயளாம். அவளோட தேப்பன்காரன் சீதனம் ஏதும் கேட்டிடுவினமோ எண்டு பிளான் பண்ணி கோவப்படுற மாதிரி கோவப்பட்டு நைசா கழட்டி விட்டிட்டாராம். பிறகு இவையள் வாடகைக்கு வீடு எடுத்து குடி போச்சினமாம். இப்ப என்ன நடக்குது என்டாலாம்.....


அவரின்ட மனிசி முரட்டுத்தனமா சாப்பிட்டு பெருத்தக் குட்டி ஆய்ட்டாளாம். அவர மதிக்கிறதும் இல்லயாம்... அவா சமைக்கிற சாப்பாட்டை நாய் கூட சாப்பிட பஞ்சிப்படுகுதாம். ஒரே சண்டை தானாம். இப்ப அவர் சொல்லுராராம், நான் அவசரப் பட்டதால எனக்கு வாச்சது மூதேவியாப் போச்சு. எனக்குப் பிறகு கலியானம் பேசி நல்ல சீதனத்தோட கட்டினவங்க கிளி போல பொண்டாட்டி கிடைச்சு சந்தோசமாய் இருக்கிறாங்கள் எண்டு ஆதங்கப்பட்டுக் கொள்ளுராராம்....

இத்தனைக்கும் எனக்கு இந்தக் கதய சொன்னவரும் லவ் மரேச் தாணுங்கோ..... சில வேளை இது அவரின்ட அனுபவமோ தெரியல....

இந்தக்கால பொம்பளப்பிள்ளைங்க ரொம்ப உசாராத்தான் செயற்படினம். இப்பிடித்தான் அரச திணைக்களம் ஒன்டில வேலை செய்யுற பொடியனுக்கு கலியாணம் பேசினவையாம். பேசின இடத்தில இவையள் தரப்புல கொளுத்த சீதனம் வாங்க பாத்திருக்கினம்... பொண்ணோட தாய்க்காறி என்ன செய்தாள் தெரியுமோ.... பொடியன் வேலை செய்யிற இடத்துக்கு அவரோட போய் பழகச்சொல்லி மகள அனுப்பி வெச்சாவாம்... அங்க மகள் போய் கதைச்ச கதையில பொடியன் மயங்கிட்டானாம். பிறகென்ன இப்ப பொடியன் சீதனமே வேண்டாம், கட்டினா அவளத்தான் கட்டுவன் எண்டு ஒற்றை காலில நிக்கிறானாம்... இத்தனைக்கும் அந்தப் பொடியனுக்கு கலியான வயசில மூன்று அக்காக்கள் இருக்கினமாம்.....

நான் பொடியல சீதனம் வாங்கித்தான் கட்டுங்கோ எண்டு சொல்ல வரேல.... சீதனம் வாங்காம கட்ட ஆசைப்பட்டா அநாதைப் பிள்ளைகள் எத்தனயோ இருக்கு. அந்தப் பிள்ளைங்களைக் கட்டுங்கோ. அத விட்டுட்டு மாட்டக் கூடாத இடத்தில மாட்டிடாதயுங்கோ....

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை