Sunday, July 17, 2011

பாலியல் சாமியாரின் கரிகாலன் மேஜிக் ஷோ - Video இணைக்கப்பட்டுள்ளது

மெய்க்குரு நித்தியானந்தா பதிவிரதை ரஞ்சிதாவுக்கு திருவிளையாடல் புரிந்த காட்சிகள் கடந்த காலங்களில் பரபரப்பாக பேசப்பட்டவை. ரஞ்சிதா இதுவரை தலை மறைவாக இருந்தார். மக்களிடம் மதிப்பிழந்த நித்யானந்தா, சிலரது தூண்டுதலின் காரணமாக சமீபத்தில் ரஞ்சிதாவுடன் சென்னை வந்து பிரஸ் மீட் நடத்தி மீண்டும் ஆச்சிரமத்தில் குடிபுகுந்தார். இந் நிலையில்...


நேற்று முன்தினம் குரு பூர்ணிமா பூஜை நடந்தது. ஆடம்பரமாக கொண்டாடினார் நித்யானந்தா. ரஞ்சிதா உள்பட ஏகப்பட்ட பெண் சீடர்கள், வெளிநாட்டு கோஷ்டிகள் அவரை சுற்றி அமர்ந்திருந்தன.

அப்போது தான் ஒரு வித்தை புரியப் போவதாக நித்யானந்தா அறிவித்தார். குண்டலினி சக்தி மூலம் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக உங்களை அந்தரத்தில் மிதக்க வைக்க போகிறேன் என்றார்.



இதையடுத்து ரஞ்சிதா உள்பட அங்கிருந்த சிஷ்யகோடிகள் அனைவரும் அந்தரத்தில் மிதக்க தயாராயினர். சிம்மாசனத்தில் அமர்ந்து கையில் வாள், கேடயம் போன்றவற்றை வைத்துக் கொண்டு நித்யானந்தா ஏதோ மந்திரம் முணுமுணுத்தார்.

பிறகு வாயை குவித்து காற்றை ஊதினார். நடக்கட்டும் என்பது போல் கைகளை அசைத்து எல்லோரையும் குதிக்க சொன்னார். குதித்து கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் சர்ரென மேலெழும்பி அந்தரத்தில் மிதக்கலாம் என்றார். 
இதையடுத்து எல்லோரும் சம்மனமிட்டு உட்கார்ந்தபடியே குதிக்க தொடங்கினர்.


ஆனால் ஜன்னி வந்தது போல எல்லோரும் குதித்ததுதான் மிச்சம், யாரும் மிதக்கவில்லை. சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்த நித்யானந்தா, ரஞ்சிதாவை பார்த்து, "ம்...நீயும் குதி..." என்பதுபோல சைகை காட்டினார்.

அடுத்த நிமிடம் தனது டிசைனர் சாரியை இடுப்பில் செருகிக் கொண்டு உட்கார்ந்த இடத்தில் இருந்து சர்வாங்கமும் அதிர குதிகுதியென குதித்தார் ரஞ்சிதா.





ஆசிரமம் முழுக்க இப்படி ஒரே துள்ளலாக இருந்ததே தவிர யாரும் அந்தரத்தில் மிதக்கவில்லை. தீவிரமாக குதித்த ரஞ்சிதா மல்லாந்து விழுந்தார். ஆனாலும் சிரித்தபடி எழுந்து உட்கார்ந்தார். கடைசிவரை யாரும் எழும்பாததால் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர்.

நித்யானந்தா மீண்டும் தன் வேஷம் கலைந்து விட்டதை திசை திருப்ப, அசட்டு சிரிப்புடன் விளக்கம் கூற முயன்றார். 






குருபூர்ணிமா போன்ற புனித நாளில் இதுபோன்ற காமெடி கலாட்டாவை அரங்கேற்றி இந்து மதத்தின் பெருமையை குலைக்கும் விதத்தில் நடந்து கொண்ட நித்யானந்தா மீது மடாதிபதிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஆபாச சாமியாரின் மற்றொரு புரட்டு அம்பலமாக குரு பூர்ணிமா பூஜை உதவியது என மக்கள் கூறினர்.





அது எல்லாம் சரி, நித்தியானந்தா பாலியல் சாமியார் என்று தெரிந்தும், மீண்டும் சீடர்கள் என்று சொல்லிக்கொண்டு மக்கள் ஏன் ஆச்சிரமத்துக்கு சென்றார்கள்??? எமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர் காட்டில் மழை தான்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை