Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Tuesday, July 5, 2011

ஓவியங்களின் புதிய தலைமுறை.. ஓவியக் கலை சிதைகிறதா...???

ஓவியங்கள் பண்டைய காலம் தொட்டு பரம்பரியம் மிக்கதாய் இருந்துவந்துள்ளது. இந்தியாவின் அஜெந்தா குகை முதல் இலங்கையின் சிகிரியா குன்று வரை ஓவியத்தின் புகழ் பரப்பும். வண்ணங்களும் ஓவியனின் தெளிவான எண்ணங்களும் ஒருங்கே ஓவியத்தின் சிறப்பில் பங்கு கொள்ளும்.
அதன்பிறகு அவற்றிற்கான முக்கியத்துவம் குறைவடைந்து நவீன ஓவியங்கள் என கிறுக்கல்கள் மவுசை தட்டிக்கொண்டன. அர்த்தம் இன்றி வரைந்தவற்றிற்கு விரும்பியபடி பல அர்த்தங்களை சுமத்தி பண்பாட்டை சோபை இழக்கச்செய்தன.

யாழ்ப்பாணப் பூலான்தேவியின் நூதன பேஸ்புக் கொள்ளை...!!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது தலைநகர் கொழும்பில் வசித்துவரும் பிரஸ்தாப 25 வயது பெண் தர்ஷனா கொள்ளையடித்திருப்பது ஆயிரமோ இலட்சமோ இல்லை...!!! சுமார் 14 மில்லியன் இலங்கை ரூபாய்கள். இந்திய மதிப்பில் சுமார் 57 இலட்ச ரூபாய்கள். கத்தி இன்றி ரத்தம் இன்றி நூதனக் கொள்ளை. முடியுமா நம்மால்...???

Sunday, June 19, 2011

ஆசீர்வதிக்க வேண்டிய வாயால் சாபமிட்ட பூசகர்...!!! மக்கள் பீதியில்!!!

யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் உள்ள நெட்டிலிப் பிள்ளையார் கோயிலில் அண்மையில் கும்பாபிசேகம் நடைபெற்றது, அவ் விழாவையொட்டி மலர் ஒன்று வெளியிடப்பட்டது. அம் மலருக்காக முன்னாள் நீதிபதி ஒருவர் 'சைவத் திருத்தலங்கள் அன்றும் இன்றும்' எனும் தலைப்பில் ஆக்கம் ஒன்றை எழுதி இருந்தார். அவ்வாக்கத்தில் இன்றைய பூசகர்களின் நடவடிக்கை பற்றிய அவரின் விமர்சனத்துக்கே குறித்த கோயில் பூசகரால் கடுமையான சாபம் விடப்பட்டுள்ளது.

Saturday, June 18, 2011

Blogger இன் புதிய டாஷ் போர்ட் (Dashboard) வரமா? சாபமா?

Blogger பரிசோதனை ரீதியில் புதிய Dashboard இனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தெரிவுசெய்யப்பட்ட Blogger பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தவாய்ப்பு எனக்கும் கிடைத்துவிட்டது. அதை பயன்படுத்தும்போது எனது அனுபவங்கள், நிறைவேறிய நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள் என்பவற்றை இப்பதிவின் மூலம் பகிர உள்ளேன்.

Sunday, June 5, 2011

இரவீந்திரநாத் தாகூரின் பல்துறை ஆளுமை

இந்தியாவில் பல நூறு பல்துறை அறிஞர்களையும் கலைஞர்களையும் உலகிற்கு அளித்ததோடு அடிமை இருளில் மூழ்கிப் பெருந்துயரில் வாடிய இந்தியர்களுக்கு ஓர் அடையாளத்தைத் தந்த முதல்வர் என்ற பெருமைக்குரியவர் இரவீந்திரநாத் தாகூர் ஆவார். அவரின் நூற்றிஐம்பதாவது பிறந்த தின விழாவை அனைத்துலக மக்களும் கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் தாகூரின் பல்துறை ஆளுமை பற்றிய கட்டுரையாக அமைகிறது.அவருடைய இலக்கியங்கள், கட்டுரைகள்,கலைப்படைப்புகள், நூல்கள் போன்றவற்றைக் கொண்டு நோக்குகின்ற போதே தாகூரின் பல்துறை ஆளுமையை அறிந்து கொள்ளலாம்.

Monday, July 26, 2010

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இணையவழி பட்டப்படிப்பு

இதுவரை காலமும் அசாதாரண சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு துறைகளும் பின்னடைவைக் காணாவிடினும் அவற்றின் வளர்ச்சியில் தடங்கல்கள் ஏற்பட்டன. அத்தகைய துறைகளில் கல்வித்துறையும் ஒன்று
மரபியல்க் கல்விமுறை காணப்பட்ட யாழ்ப்பாணத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களினால் நாட்டிற்கு வெளியே பிரகாசிக்க முடியாமல் போனது. இக் குறைபாடுகளை நீக்கி தமிழ் மாணவர்களை சர்வதேச சவால்களை எதிர்கொள்ளக் கூடியவர்களாக மாற்றும் முதல் முயற்சியை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பீடம் ஆரம்பித்து வைத்துள்ளது. அம் முயற்சிக்காகப் பாடுபட்டவர்களில் முக்கியமானவரான முகாமைத்துவப் பீடாதிபதி பேராசிரியர்.தேவராஜா ஐயா அவர்களை இங்கு நினைவு கூறுகின்றேன்.
யாழ்ப்பாண கலாச்சாரத்தில் ஒரு சுவரஸ்யமான மரபு இருக்கிறது. ஒருவர் எவ்வளவு படித்து நானாவித பட்டங்களை வைத்திருந்தாலும் அவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டமொன்றை பெற்றிருந்தால் மட்டுமே சமூக அங்கீகாரம் ஒன்று அவருக்குக் கிடைக்கும். அந்த வகையில் முகாமைத்துவ பீடத்தால் வழங்கப்படும் இவ் வாய்ப்பு அளப்பரியது.
இணையவழிப் பட்டப்படிப்பில் தொடர்பாடல் ஊடகமாக இணையம் பயன்படுகிறது. குறித்த வலைத்தளத்தில் இடப்படும் பாடக்குறிப்புக்களை பிரத்தியோக கடவுச்சொல்லை பயன்படுத்தி கற்றுக்கொள்ளலாம். நேரடி வகுப்புக்கள் அவசியமற்ற தொலைக்கல்வியி முறையில் பேராசிரியர்களின் தன்னார்வ சேவைமனப்பாண்மையால் மாணவர்களை பரீட்சைகளுக்கு தயார் படுத்தும் நோக்கில் சில நேரடி வகுப்புக்களை நடாத்துவது பெருமைக்குரியது.
Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை