Sunday, May 15, 2011

Facebook's Open Computer Project - Linux ஐ அடிப்படையாக கொண்டது

ஃபேஸ்புக் நிறுவனம் புதிய திட்டம் பற்றிய அறிவித்தல் ஒன்றினை தனது தலைமையகத்திலிருந்து வெளியிட்டுள்ளது. இது ஒரு வித்தியாசமான திட்டமாக அமைந்திருந்தது.  "Open Computer Project"  என்பதே இந்த புதிய திட்டத்தின் பெயர்.
Open Compute Project என்பது ஃபேஸ்புக் நிறுவனத்தின் Hardware கட்டமைப்புடன் தொடர்புடைய ஒரு திட்டம். ஃபேஸ்புக் நிறுவனம் தனது Data Center இன் தொழிநுட்பங்களை உலகளவில் பகிர்ந்து கொள்ளப்போகிறது.அதாவது Open Source ஆக்கியிருக்கிறது.



 இந்தத் திட்டம் தொடர்பாக பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு ஆரம்பக்கட்டத்தில் உள்ள நிறுவனம் எவ்வாறு ஒரு Data center இனை தோற்றுவிக்கிறது. அதற்கு எவ்வாறான செலவுகள் ஏற்படுகிறது அவ்வாறான சந்தர்ப்பத்தில் ஃபேஸ்புக் எவ்வாறான முறையினை கையாண்டது என பல விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

மேலும் ஃபேஸ்புக் நிறுவனம் தனது வினைத்திறனான Data Center இன் மூலம் எவ்வளவு மின்சக்தியினை சேகரிக்கின்றது , எவ்வளவு பணத்தினை மீதப்படுத்திகிறது மேலும் எவ்வளவு வெப்பத்தினை குறைக்கிறது என்பது தொடர்பான தரவுகளினை ஃபேஸ்புக் வெளியிட்டிட்டுள்ளது.

இந்தத்திட்டம் பற்றி மேலும் அறிய இங்கே அழுத்தவும்.


No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை