Sunday, July 17, 2011

ஆண்களை ஆண்கள் மேட்டர் செய்வது இலங்கையில் அதிகரிப்பு...!!!


இலங்கையில் தன்னினச் சேர்க்கைச் செயல்பாடுகள் அதிகரித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தன்னினச் சேர்க்கைச் செயல்பாடுகளுக்கு பேஸ் புக் போன்ற சமூக இணைப்பு இணையத் தளங்கள் களம் அமைத்துக் கொடுக்கின்றமையால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டு உள்ளது என குறிப்பிடப்பட்டு உள்ளது. 

கொழும்பு பரடைஸ் - 2011 போன்ற ஒன்று கூடல்கள் தன்னினச் சேர்க்கையாளர்களால் ஒழுங்கு பண்ணப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.


செக்ஸில் ஈடுபட்டனர் என்று ஆதாரம் இருக்கின்ற பட்சத்தில் மாத்திரமே பொலிஸாரால் கைதுகளை மேற்கொள்ள முடியும், தன்னினச் சேர்க்கையாளர்களின் ஒன்றுகூடல்களை தடுக்க நாட்டின் சட்டத்தில் இடம் கிடையாது என்று சட்ட வல்லுனர்கள் கூறுகின்றார்கள்.

ஏனைய நாடுகளைப் போன்று இலங்கையிலும் தன்னினச் சேர்க்கை எதிர்காலத்தில் சமூக அங்கீகாரம் பெறக் கூடும் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

ஆணும் ஆணுக்குமிடையே அல்லது பெண்ணும் பெண்ணுக்குமிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு அடிப்படையிலான உறவு ஓரினச்சேர்க்கை அல்லது தற்பால்சேர்க்கைஎனப்படும். தம் பாலினத்தைச் சேர்ந்த நபர்களைக் காமுறுதல், உடலுறவுக்கு விழைதல், காதல் வயப்படுதல் என்பவற்றால் தற்பால்சேர்க்கை அடையாளம் காணப்படலாம். தன்பாலினப்புணர்ச்சி, சமப்பாலுறவு என்றும் தமிழில் ஓரினச்சேர்க்கை குறிக்கப்படுவதுண்டு.
ஓரினச்சேர்க்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது

ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தின் போது

தற்பால்ச்சேர்க்கை மனித வரலாறு முழுவதுமே தன் தொடர்ச்சியைக் கொண்டிருந்தாலும் கூட, பொதுச் சமூகங்களில் வெறுப்பிற்குரிய விடயமாக அணுகப் பட்டது. இன்றளவும் பல நாடுகளில் தற்பால்சேர்க்கை அவமானகரமான விடயமாக, சட்ட விரோதமானதாக உள்ளது.
இந்தப் பால்நிலை வகுபாடானது 60களில் இடம்பெற்ற ஸ்ரோன்வோல் கலவரங்களைத் தொடர்ந்து பொதுச் சமூகங்களில் தனக்கான அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது. பலநாடுகள் தற்பால்சேர்க்கையை சட்டபூர்வமானதாய் அங்கீகரித்துள்ளன.

கீழ் உள்ள படம் ஓரின சேர்க்கை தொடர்பாக நாடுகளின் கொள்கை பற்றிய வெளியீடு காட்டப்பட்டுள்ளது.









தற்பால்சேர்க்கை சட்ட உடன்பாடு     தற்பால் திருமணங்கள்     தற்பால் சேர்ந்து வாழ்தல்     தற்பால் சேர்ந்து வாழத்தடை     பன்னாட்டு மணச்சான்றிதழ் அங்கீகாரம்தற்பால்சேர்க்கை சட்ட எதிர்     குறைந்த தண்டனை     அதிக தண்டனை     ஆயுட்கால சிறை     மரண தண்டனை
விஞ்ஞான ரீதியில் தற்சேர்க்கை நாட்டத்துக்கும் அவர்களின் பிறப்பு ஜீன்களுக்கும் தொடர்பிருப்பதாக நிரூபிக்கின்றன.
எது எவ்வாறாயினும் கலாச்சாரம், பண்பாடுகளால் கட்டியெழுப்பப்பட்ட தமிழர் நமக்கு எக்காலத்திலும் இது அருவருக்கத்தக்கதொன்றே...!


No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை