Saturday, May 14, 2011

Google cloud connect


மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் Office மென்பொருளிற்கும் Google Docs இற்கும் இடையில் கூகிள் ஒரு இணைப்பை ஏற்படுத்தி அதனை குறிப்பிட்ட பாவனையாளர்களிற்கு மாத்திரம் வழங்கியிருந்தது. தற்போது அந்த வசதியானது இனி அனைத்து கூகிள் பாவனையாளர்களாலும் உபயோகப்படுத்தும் வகையில் வெளிவந்துள்ளது.

இந்த Google cloud connect இனை கணணியில் நிறுவிக் கொள்வதன் மூலம் எமது கூகிள் கணக்கில் காணப்படும் ஆவணங்களினை மைக்ரோ சொப்ட் office மென்பொருளினைப் பயன்படுத்தி தொகுக்கும் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. மேலும் நாம் ஆவணங்களை தொகுக்கும் போது அவற்றை நேரடியாக எமது கூகிள் டொக்ஸ் கணக்கில் சேமிக்கும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.


இங்கு அழுத்துவதன் மூலம் விண்டாஸ் சிஸ்டத்தில் நிறுவிக் கொள்ளலாம். அவ்வாறு நிறுவிய பின்னர் Microsoft office இல் ஏதாவது ஒரு மென்பொருளினை திறந்து Sign in என்பதை க்ளிக் செய்து கூகிள் கணக்கினை லாகின் செய்வதன் மூலம் எமது ஆவணங்களினை கூகிள் டொக்ஸ் இல் சேமித்துக் கொள்ள முடியும்.

2 comments:

ranjan said...

usefull one

admin said...

நன்றி ரஞ்சன் அண்ணா, தொடர்ந்து உங்களை வலைப்பூவுக்கு வரவேற்கிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை