Monday, July 11, 2011

வெளிநாட்டில கழுவுவம் இங்க கழுவ மாட்டம்...!!! - வீடியோ இணைப்பில்















எனக்கு தெரிந்து யாழ்ப்பாணத்தில் எல்லா பெற்றோரும் நீ டொக்டர் ஆகனும்..... எஞ்சினியர் ஆகனும் என்று மட்டும் தான் சொல்லி பிள்ளைகளை வளர்ப்பார்கள். எல்லோராலும் டொக்டர் ஆகமுடியுமா என்று இயலுமையை எவரும் சிந்திப்பதில்லை. டொக்டர் கனவுடன் வளர்ந்த பிள்ளை பரீட்சை கோட்டை விட்டதும் மனமுடைந்துவிடுகின்றது. அத்தோடு தங்கியிருப்போர் படையில் நிரந்தரமாக தங்கிவிடவும் எத்தனிக்கின்றது. மட்டு மட்டாக பாஸ் பண்ணி பல்கலைக்கழகம் சென்றவர்கள் பட்டம் பெற்றதும் அப் பட்டத்துக்கு ஏற்ற வேலை தான் வேண்டும் என்று காத்திருக்கிறார்கள்.


காத்திருந்து கடுப்பாய் ஆனவர்கள் பதாகைகளை ஏந்தியபடி போராட்டங்கள் நடாத்துகிறார்களே தவிர, சுய தொழிழுக்கு எவ்வித முயற்சியும் எடுப்பதே இல்லை. வறட்டு கௌரவம் தமது வாழ்வை வஞ்சிப்பதை அவர்கள் புரிந்துகொள்ள நீண்டகாலம் கடந்து சென்று விடுகின்றது.

யோசித்து பார்க்க வேண்டும், தொழிலில் என்ன கௌரவக் குறைவு இருக்க போகிறது. வெளிநாடுகளில் சென்று கண்ட வேலைகளையும் செய்யும் இவர்கள் ஏன் தாய்நாட்டில் சுய தொழிலுக்கு ஊக்கம் எடுப்பது இல்லை...???

என் கண்ணில் பட்ட ஓர் Video ஐ கீழே இணைத்துள்ளேன். அங்கு காணப்படும் நபர் நாள் ஒன்றுக்கு ஓர் வேலை என பலவேலை பார்க்கிறார். எத்தொழிலிலும் ஏற்றத்தாழ்வு இல்லை என்பதை தெளிவாக புரியவைக்கிறார்.

அலுவலக வேலையில் இருந்து நாய் மேய்க்கும் வேலைவரை சரி சமனாக நினைத்து செய்கிறார். (ஆபாசமாகவும் ஓர் வேலை செய்கிறார்)



மனம் உண்டானால் இடம் உண்டு...!!!

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை