Monday, July 18, 2011

குனிஞ்சு எடுக்கேக்க முழுசா தெரியுது...!!!
இன்று உலகத் தமிழர்களின் கலாச்சாரம் உருக்குலைந்து செல்லத்தொடங்கியுள்ளதை கண்கூடாக காணக்கூடியதாக உள்ளது. தமிழ்க்கலாச்சாரம் முற்றுமுழுதாக பெண்களை பின்னிப்பிணைந்தே உருவாக்கப்பட்டது. ஆகவே பெண்களின் நடத்தையில் தான் எங்கள் கலாச்சாரத்தின் ஆயுள் தங்கியுள்ளது. புடைவை கடை ஒன்றுக்கு 20 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் தனது தாயோடு வந்திருந்தார். அந்நிலையில் நடைபெற்ற சம்பாசனை கீழே தரப்பட்டுள்ளது.மகள்: அக்கா (Saleswomen) ரீசேர்ட் ஒன்டு எடுக்கோனும். நல்ல ரோஸ் கலரா காட்டுங்கோ.

தாய்: ஏன்டி ரீசேர்ட் எடுக்கிறாய், Blouse எடுத்தால் எல்லா நேரமும்போடலாம் எல்லோ. கோயிலுக்கும் போடலாம்.

மகள்: அம்மா சும்மா இரன(பல்லை நெருவியபடி), சயன்ஸ் கோலுக்கு Blouse போட்டுக்கொண்டு போனா பகிடி பண்னுவாங்கள்.

தாய்: நாங்கள் எல்லாம் முந்தி சீத்த துணீல சட்ட தச்சு தானே போட்டனாங்கள்....

மகள்: இவா இப்பிடித்தான் அலம்பிக்கொண்டு இருப்பா, நீங்கள் காட்டுங்கோ அக்கா..

(கடை பெண் சில ரீசேர்ட் களை எடுத்து மேசையில் போடுகிறார்)

மகள்: அக்கா கழுத்து ஆழமா வெட்டின ரீசேர்ட் இருந்தா காட்டுங்கோ.

தாய்: ஏன்டி இந்த கழுத்துக்கால உன்ட தல போகும் தானே, ஏன் பெரிய கழுத்து கேக்கிராய்?? அத போட்ட தொங்கிக்கொண்டெல்லோ இருக்கும்!

மகள்: ஐயோ அம்மா, ஆழமான கழுத்து சட்டை போட்டா தான் கலர்ஸ் ஆ இருக்கும்.

தாய்: ஏன்டி இந்த ரீசேர்ட் களும் பஞ்சுமிட்டாய் கலரில அழகாத்தானேடி இருக்கு..

கடை பெண்: அவா கலர்ஸ் என்டு சொல்லுறது ஸ்டைல அன்ரி.இப்ப இது தான் யாழ்ப்பாணத்தில நடக்குது. ஆழமான கழுத்து சட்டை போட்டு பாதி நெஞ்சை மேலால காட்டுறது தான் இப்ப பேசன்.இப்பிடி சட்டை போட்டு போகேக்க கீழ ஏதாவது விழுந்தா அவளவ குனிஞ்சு அத எடுக்கேக்க முழுசா எல்லாம் தெரியுது.

அந்த கறுமங்களை அடிக்கடி பார்த்து பார்த்து அலுத்துப்போய் எங்கட பொடியல் சாமிப்போக்கில திரியுறாங்கள். 

எங்கட பெட்டைகள் கொழும்புக்கு போனால் அங்க இருக்கிற சகோதர மொழி பெட்டைகளை பாத்திட்டு இங்க வந்து அது போல ஆடை அணிவது, ஃபேஸ்புக்கில வெளிநாட்டு காரிகளின்ட போட்டோக்களை பாத்திட்டு அது மாதிரி வெளிகிடுறது.

இப்பிடி எல்லா கறுமங்களையும் கொப்பி அடிச்சு அடிச்சு மண்ணா போனது தான் மிச்சம்.

நான் திரும்ப திரும்ப சொல்லுறது என்ன என்டா, எங்கட பொடியல் கவர்ச்சியா போன ஊடுருவி பாப்பாங்கள், ஆன திருமணம் என்டு வரும்போது முதலில பார்ப்பது பண்பாட்டை தான். அத நீங்கள் தெளிவா தெரிஞ்சுகொண்டா போதும்.

எங்களுக்கு தமிழ்ப்பொடியல் வேண்டாம், நாங்கள் வெளிநாட்டுகாறரை கட்டுறம் என்டும் சொல்லுவீங்கள். அவன் பாதில நடு தெருவில விட்டுட்டு போகேக்க தான் எங்கட அருமை விளங்கும்.

4 comments:

suganthiny said...

நீங்கள் சொன்னது உண்மை தான்.
ஆனால் நல்லவர்களும்
இன்னும் இருக்க தான் செய்கிறார்கள்.
இதற்கு ஒரு வழி உள்ளது.
அது வேறு ஒன்றுமில்லை
அவர்களுக்கு எதிராக
கிளர்ந்தெழுவது தான்.

zeyaan said...

நன்றி,
இன்னும் சிறிது காலத்தில் நல்லவர்களும் மாறிவிடுவார்கள். கிளர்ந்தெழுந்தால் நாம் தான் மூக்குடையவேண்டி வரும்.

சில விலைப்பட்டியல்

சேலை - 3000/=
சுடிதார் - 2000/=
குட்டைப்பாவடை + ரீசேட் = 200/=

இந்த விலைப்பட்டியலைப் பார்க்க உங்களுக்கு புரியுமென நினைக்கிறேன் சுகந்தினி.

Arjun Rajeswaran said...

super machan......
NOW JAFFNA patti solla mudijala
kadavul than kappathanum

zeyaan said...

thanks machchan கடவுளாலயும் காப்பாத்துறது கஸ்டம் தான்டா!!!

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை