
மரபியல்க் கல்விமுறை காணப்பட்ட யாழ்ப்பாணத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களினால் நாட்டிற்கு வெளியே பிரகாசிக்க முடியாமல் போனது. இக் குறைபாடுகளை நீக்கி தமிழ் மாணவர்களை சர்வதேச சவால்களை எதிர்கொள்ளக் கூடியவர்களாக மாற்றும் முதல் முயற்சியை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பீடம் ஆரம்பித்து வைத்துள்ளது. அம் முயற்சிக்காகப் பாடுபட்டவர்களில் முக்கியமானவரான முகாமைத்துவப் பீடாதிபதி பேராசிரியர்.தேவராஜா ஐயா அவர்களை இங்கு நினைவு கூறுகின்றேன்.
யாழ்ப்பாண கலாச்சாரத்தில் ஒரு சுவரஸ்யமான மரபு இருக்கிறது. ஒருவர் எவ்வளவு படித்து நானாவித பட்டங்களை வைத்திருந்தாலும் அவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டமொன்றை பெற்றிருந்தால் மட்டுமே சமூக அங்கீகாரம் ஒன்று அவருக்குக் கிடைக்கும். அந்த வகையில் முகாமைத்துவ பீடத்தால் வழங்கப்படும் இவ் வாய்ப்பு அளப்பரியது.
இணையவழிப் பட்டப்படிப்பில் தொடர்பாடல் ஊடகமாக இணையம் பயன்படுகிறது. குறித்த வலைத்தளத்தில் இடப்படும் பாடக்குறிப்புக்களை பிரத்தியோக கடவுச்சொல்லை பயன்படுத்தி கற்றுக்கொள்ளலாம். நேரடி வகுப்புக்கள் அவசியமற்ற தொலைக்கல்வியி முறையில் பேராசிரியர்களின் தன்னார்வ சேவைமனப்பாண்மையால் மாணவர்களை பரீட்சைகளுக்கு தயார் படுத்தும் நோக்கில் சில நேரடி வகுப்புக்களை நடாத்துவது பெருமைக்குரியது.
No comments:
Post a Comment