Sunday, January 2, 2011

பாஸ்வேர்ட் அமைக்க சில வழிகள்

கணினி பயன்படுத்துபவர்களுக்கு பாஸ்வேர்ட் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

பாஸ்வேர்ட் பயன்படுத்தாமல் நாம் கம்பியூட்டரை முழுமையாக இயக்க முடியாது. உண்மையில் பாஸ்வேர்ட் என அழைக்கப்படும் பின் (PIN) என்பது ஒரு பூட்டைத் திறக்கும் சாவி போன்று செயல்படுவதாகும்.

கணினியில் உள்ள புரொக்கிராம்களை விண்டோஸ் போன்றவற்றை தனித்தனியாக பாஸ்வேர்ட் என்ற போர்வையால் பூட்டிக்கொள்ளலாம்.

பாஸ்வோட் எனப்படும் பின் பயன்படுத்தப்படும் சூழ்நிலைகளாவன:

1. கணினியை இயக்க ஆரம்பிக்கும் போது பாஸ்வேர்ட் பயன்படுத்தப்படுகிறது.

2. கம்பியூட்டரை நெட்வேர்க்கில் இணைக்கும் போது

3. சில மென்பொருட்களை ஆரம்பிக்கும் போதும் உருவாக்கும் போதும் தேவைப்படலாம்.

4. இன்டர்நெட் இணைப்பை ஏற்படுத்த (dialup/ wireless)

5. குறிப்பிட்ட சில இணையதளங்களை மேயும் போது பதிவு செய்து யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்தால் மட்டுமே தகவல்களை பார்வையிடலாம்.

6. இணையதளங்களில் ஈ.மெயில் கணக்கு ஆரம்பிக்கும் போது சரி பயன்படுத்தும் போதும் சரி பாஸ்வேர்ட் மிகவும் அவசியம்.

7. மின்வணிகத்தில் ஈடுபடும் போதும், கிரடிட் கார்ட்டை செயற்படுத்தும் போது… (E-commerce)

8. முக்கியமான இரகசிய தகவல்களை திருட்டு போகாமல் பாதுகாத்து வைக்க..

9. சில கருவிகள் (Routers, network printers…) மற்றும் பைல்களை கையாளும் போது என பல தடவை நாம் பாஸ்வேர்ட் எனும் கருவியை மட்டுமல்லாது அதன் யூசர் நேம்மையும் பயன்படுத்த வேண்டும்.

சமீபத்தில் நடந்த ஆய்வின் போது தெரியவருவதாவது:

கம்பியூட்டர் பயன்படுத்துபவர் குறைந்தபட்சம் 10 பாஸ்வேர்ட்டுக்களை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டியுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 30 சதவீதமான பயன்பாட்டாளர்கள் 6 இலிருந்து 9 வரையான பாஸ்வேர்ட்டுகளை மட்டுமே நினைவில் வைத்துள்ளனர்களாம்.

மேலும் இந்த ஆய்வின் முடிவில் 88 சதவீத்தினர்கள் பாஸ்வேர்ட்டுகளை பயன்படுத்துவதில் தடுமாற்றமும் வெறுப்பும் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பாஸ்வேர்ட் உருவாக்க சில எளிய வழிமுறைகள்

1. பாஸ்வேர்ட்களை எளிதாக ஞாபகம் வைத்துக் கொள்ளக்கூடியதாகவும், பிறர் இலகுவில் ஊகித்து பாஸ்வேர்ட்டுகளை கண்டறிய முடியாதவாறும் இருக்கவேண்டும்.

2. பாஸ்வேர்டுகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக அமைக்கவேண்டும். அத்துடன் பாஸ்வேர்ட்டில் குறைந்தபட்சம் 6 எழுத்துக்களாவது இருக்கவேண்டும்.

3. பாஸ்வேர்ட்டில் பெரிய எழுத்துக்களையும் (Capital letters) சிறிய எழுத்துக்களையும் (small letters) இலக்கங்கள் மற்றும் சிறப்பு எழுத்துக்களை (%, !, #, $, @, -) பயன்படுத்தலாம்.எல்லா வகையான எழுத்துக்களையும் கலந்து பாஸ்வேர்ட்டை பயன்படுத்துங்கள். அது மிகப்பெரிய பாதுகாப்பு வேலியாக அமையும் என்பதில் சந்தேகமேயில்லை.

4. பாஸ்வேர்ட்டுகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றிக் கொண்டேயிருங்கள். உதாரணமாக மாதமொரு முறை அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையேனும் மாற்றினால் உங்களது தகவல்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.

5. தனிநபரின் பெயரோ அல்லது ஊர் பெயரையோ பாஸ்வேர்ட்டாக பயன்படுத்தாதீர்கள். முக்கியமாக பிறந்த திகதியோ மொபைல் நம்பரையோ அல்லது காதலன் காதலியுடைய அல்லது அப்பா அம்மா உறவுப் பெயர்களையெல்லாம் கண்டிப்பாக பயன்படுத்தவே கூடாது.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை