Wednesday, May 11, 2011

மைக்ரோசொப்ட் நிறுவனம் ஸ்கைப் நிறுவனத்தை கொள்வனவு செய்ய முடிவு செய்துள்ளது

 

உலகின் முன்னணி மென்பொருள் உற்பத்தி நிறுவனமான மைக்ரோசொப்ட் நிறுவனம், உலகின் முதனிலை இணைய தொலைபேசி நிறுவனங்களில் ஒன்றான ஸ்கைப் நிறுவனத்தை கொள்வனவு செய்யத் தீர்மானித்துள்ளது.



மைக்ரோசொப்ட் நிறுவனம் கூடுதலான பணத்தைக் கொடுத்து கொள்வனவு செய்த நிறுவனமாக ஸ்கைப் பதிவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்கைப் நிறுவனத்தை 8.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொடுத்து மைக்ரோசொப்ட் நிறுவனம் கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளது.

லக்ஸ்ம்பர்க்கை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஸ்கைப் நிறுவனத்தின் சேவையை உலகம் முழுவதிலும் உள்ள 663 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருவகின்றனர்.

ஸ்கைப் ஓர் சிறந்த சேவை எனவும் இதனை உலகின் பல பாகங்களிலும் வாழும் மக்கள் நேசிப்பதாகவும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்டீவ் பால்மர் தெரிவித்துள்ளார்.

தொடர்பாடல்துறையை மேலும் எளிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அண்மைக்காலமாக லாபத்தை பதிவு செய்ய முடியாத நிறுவனமொன்றுக்காக அமெரிக்காவின் மைக்ரோசொப்ட் கூடுதலான பணத்தை செலவிடுவதாக பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால் பணத்தையே குறிக்க்கோளாக கொண்ட மைக்ரோசொப்ட் நிறுவனம், வரும் காலங்களில் ஸ்கைப்பை கட்டண ஊடகமாக மாற்ற வாய்ப்புள்ளதாக பாவணையாளார்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை