ஆடிக்கூழ் என்பது யாழ்ப்பாணத்து மக்கள் மத்தியில் மிகப்பிரபல்யம் வாய்ந்த ஒரு உணவுப்பண்டமாகும்.
ஆடிக்கூழை செய்வதற்குத் தேவையான பொருட்கள்.
அரிசிமா - 1/2 கப்
பயறு - 1/4 கப்
தேங்காய்பால் - 2 கப்
பனங்கட்டி - 3/4 கப்
தேவையான அளவு தேங்காய்ச்சொட்டு, உப்பு மற்றும் தண்ணீர்
செய்முறை
1. பயறு மற்றும் அரிசிமாவை தனித்தனியாக வெறும் சட்டியில் போட்டு வறுக்கவும்.
2. இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவைத்து அதனுள் வறுத்த பயறைப் போட்டு அவிய விடவும்.
3. பயறு ஓரளவு வெந்தவுடன் அரிசி மாவை தேங்காய்ப்பாலில் கரைத்து அதனுள் விட்டு மா கட்டிபடாமல் இருக்குமாறு அடிக்கடி கிளறவும்.
4. மா வெந்ததும் (கூழ் தடிப்பாகும்) அதனுள் பனங்கட்டி, உப்பு,தேங்காய்ச்சொட்டு ஆகியவற்றைச் சேர்த்து கிளறி இறக்கவும்.
5. சுடச்சுட அருந்த சுவையான ஆடிக்கூழ் தயார்!
No comments:
Post a Comment