Wednesday, May 18, 2011

ராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டுமா...

ராஜ் டிவி இந்த பிழைப்பு பிழைக்கிறதுக்கு நாய்ப் பல்லும், சிட்டுகுருவி லேகியமும் விக்கலாம். ராஜ் டிவி-இல் இரவு 10.30 மணியளவில் நடத்தப்படும் ஓர் நிகழ்ச்சி " சினிமா தெரியுமா"
இந்த நிகழ்ச்சியில் ஓர் பிரபலநடிகரின் முகமும் நடிகையின் முகமும் அர்த்தநாரீஸ்வர உருவம் போல இணைத்து காண்பிக்கப்படும். அந்த பிரபல நடிகர்களை யாவரும் எளிதாக கண்டுபிடிக்க முடியும். அதை கண்டுபிடித்தால் 50,000 இந்திய ரூபா, இலங்கை மதிப்பில் சுமார் 1,50,000 ரூபா.




இந்த கேள்விக்கான விடையை உடனே கீழ் காண்பிக்கப்படும்தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விடை சொல்லுங்கள், விடைசொல்லுங்கள் என்று நிகழ்ச்சியை நடத்துபவர் வடிவேலு மூட்டைப்பூச்சி மெசின் விற்பதை போல கூவுவார். ஒரு பெண் நடத்துபவரும் கோரஸ் ஆக கூவ அரை குறையாக, அவரது பைன் அப்பிள் முகத்தை மேக்கப் மூலம் டிங்கரிங், பெயிண்டிங் செய்து ஆப்பிள் போல மாற்றி நிறுத்தப்பட்டு இருப்பார்.






அவர்களுக்கு போனில் தொடர்பு கொள்பவர் சம்பந்தமில்லாத விடைகளையே கூறுவார். உதாரணமாக நான் இன்று 17-05-2011 நடைபெற்ற நிகழ்வின் படங்களை இணைத்துள்ளேன். இங்கு காட்டப்பட்டுள்ளது தனுஷ் உம் சினேகாவும் என வெளிப்படையாக தெரிகிறது. ஆனால் முதலில் விடை சொன்னவர் ஜித்தன் றமேஸ் உம் மாளவிகாவும் என்று சொல்ல இரண்டாவதாக அழைத்தவர் பரத்தும் ஜெனிலியாவும் என்றார்கள். நான் இன்றுதான் இவ் நிகழ்ச்சியை பார்த்தேன். டயல் செய்து பார்த்தேன், அது இந்தியாவுக்குள் மட்டும் போல, நான் இலங்கை என்பதால் தவறான இலக்கம் என்று லைன் கிடைக்கவில்லை.


வலைத்தளங்களில் தேடி பார்த்தபோதுதான் எனது இந்திய உறவுகள் தமது கடுப்புக்களை கொட்டித் தீர்த்திருப்பது தெரிந்தது.


அந்த நிகழ்ச்சியை பற்றி சக பதிவாளர் ஒருவர்,


 " . அந்த பரிசு தொகையை நாம் பெறுவதற்கு அந்த தொலைபேசிஎண்ணை நாம் தொடர்பு கொண்டால் நம் செல் போனில் ருபாய் 10 உடனேகபளீகரம் செய்து விடுவார்கள்.. மேலும் அந்த தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படாமல் ஹோல்ட் செய்யப்படும்... நம் அந்த அழைப்பில் இருக்கும் ஒவ்வொருநிமிடத்திற்கும் ருபாய் 10 கொள்ளை அடிக்கப்பட்டு (பிச்சை எடுக்கப்பட்டு) இருக்கும்.


இந்த அழைப்பில் கொஞ்சம் விளம்பரம், கொஞ்சம் அம்பான உபசரிப்போடு ஒருபதிவு செய்யப்பட்ட பெண்ணின் குரல் கேட்க்கும்... என்ன சொல்லுகிறார்கள்என்று செல் போனை நம் காதோடு வைத்து இருந்தால் இருக்கும் கொஞ்சம் காசும்காலியாகிவிடும். இந்த நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனத்தினர் செய்யும்இன்னுமொரு ஏமாற்று வேலை என்னவென்றால் " டைமர் " என்னும்கீழ்த்தரமான நான்கு நிமிடம் ஓடும் டைமிங். இந்த டைமிங் முடிவதற்குள் நீங்கள்செல் போன் மூலம் தொடர்பு கொள்ளுகள் என்று கெஞ்சுவார்கள்.... நாம் தொடர்புகொண்டால் நம்முடைய கால் ஹோல்ட் செய்யப்பட்டு இருக்கும்....... ஆனால்நிமிடம் முடியும் நேரத்தில் ஒருவர் தொடர்பு கொள்ளுவர்... அந்த நபர்கேள்விக்கான பதிலும் சொல்லுவர். ஆனால் அந்த பதில் கண்டிப்பாக தவறாகமட்டுமே இருக்கும்..... ஏன் என்றால் அந்த நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனத்தார்ஒருவரே வேண்டும் என்றே பதிலைதவறாக கூறி நேரத்தை அதிகபடுதுவார் . நிகழ்ச்சியை நடத்துபவர் சில நேரம் உங்களுக்கு ஒரு போனில் இவ்வளவு பணம்யாருங்க கொடுப்பார் என்று காமெடி பண்ணுவார்....

இப்படி ஏமாற்றி பணத்தை கறக்கும் ராஜ் டிவி இதைவிட தெருவில் நின்று பிச்சைபோடுங்கள் என்று கூவி கூவி பிச்சை எடுக்கலாம்.... பிச்சை போடுங்கள், பிச்சைபோடுங்கள் என்று பிச்சை எடுக்கலாம்... இந்த வேலை செய்யும் செல் போன்நிறுவனத்தார் வேறு ஏதாவது!!!! வேலையை கூட செய்யலாம்.... இப்படிசம்பாதிப்பதை எதை கொண்டும் சரி என்று சொல்லுவது மடத்தனமான ஒருவாதம்...''


என்ன கொடுமை சரவணா.... 





12 comments:

Anonymous said...

இப்ப் கலைஞர் டிவியும் சொல்லுங்கள்,வெல்லுங்கள் என புதுசா திருவோடு தூக்கியிருக்காங்க.
வாழ்க தமிழ் தொலைகாட்சி!!! ஹ ஹ ஹ

உங்கள் நண்பன் பாலசந்தர் said...

நன்றி zeyaan . என்னுடைய வாதத்தை நீங்களும் என்னோடு இணைந்துகொண்டு சொன்னதற்கு நன்றி...
http://nanbanbala.blogspot.com/search?updated-min=2010-01-01T00%3A00%3A00-08%3A00&updated-max=2011-01-01T00%3A00%3A00-08%3A00&max-results=3 இதையும் பாருங்கள்.... நன்றி. பாலா...

admin said...

நன்றி ஜெயசீலன், சரோ. கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.

admin said...

நன்றி பாலா அண்ணா, உங்கள் பதிவையும் பார்த்தேன்.

Jayadev Das said...

யானை போறதை விட்டுவிட்டு கொசு போறதை புடிச்சிட்டீங்க. இவன் ஏதோ அஞ்சோ பத்தோ திருடுறான், நீங்க ஓட்டுப் போட்டு MP MLA ஆக்கியவர்கள் மக்கள் பணத்தை கமிஷனுக்கு ஆசைப்பட்டு ஊழல் பண்ணி அதன் மூலம் ஆயிரம் கோடி, லட்சம் கோடி என அம்பானி போன்ற தனியாருக்குத் தாரை வார்க்கிரார்களே, அதை என்ன சொல்ல?

admin said...

உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி ஜெயதேவ் அண்ணா.

Yazhini said...

இந்த பதிவிற்கு நன்றி. ஆனால், ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றும் வர்க்கமும் செயல்பட தான் செய்யும். ஆக்கப் பூர்வமான பல வேலைகள் தேங்கிக் கிடக்க, நம்மைப் போன்றவர்கள் இவ்வாறான நிகழ்ச்சிகளை புறக்கணித்தால், ஒளிபரப்ப தயங்குவார்கள். உண்மையா இல்லையா ?

RAJESH1972 said...

தீதும் நன்றும் பிறர் தர வரா, என்ற மொழிக்கேற்ப்ப நம் செயல்களின் மீது எவரும் ஆதிக்கம் செலுத்த இயலாது. ராஜ் டிவியின் நிகழ்ச்சியில் எனக்கு தெரிந்தவரை எவரும் தொலைபேசியில் அழைக்கும்படி கட்டாயப்படுத்தப்படுவதில்லை, மாறாக அவ்வாறு அழைக்க தூண்டுகிறார்கள் என்பதே உண்மை. இது போன்ற தூண்டுதல்களுக்கு ஏன் ஆளாக வேண்டும், பின்பு ஏன் புலம்ப வேண்டும் ? செயற்கரிய செயல்கள் பலவும் நமகாக காத்திருக்க , எவ்வித பயனுமில்லாத இது போன்ற செயல்களை செய்வது மட்டுமல்ல, விமரிசனம் செய்வதும் தேவை அற்ற ஒன்றாகும்.மேலும் யாழினியின் கருத்தில் முற்றிலும் மெய் உள்ளது. வழிமொழிகிறேன்.

admin said...

நன்றி ராஜேஷ், யாழினி. எனக்கும் இந்த விமர்சனம் எழுத அவசியம் இல்லைத்தான். ஆனால் அந்த நிகழ்ச்சியை பர்த்துவிட்டு தூக்கம் வராமல் கடுப்பில் இட்ட பதிவு தான் இது.

கோவை நேரம் said...

http://kovaineram.blogspot.com/2011/03/blog-post_2978.html என்னோட கருத்தும் உங்கள போலதான் ...

admin said...

பின்னூட்டத்துக்கு நன்றி கோவை நேரம்.

a.nagarasan said...

தற்போது எல்லா தொலைகாட்சிகளும் இந்த யுக்தியை (தமிழ், தெலுங்கு,இந்தி)கையாண்டு நீட்டியவன் தலையை தடவுகிறார்கள்.இதை மாதிரியாக காலர் ட்யூன் கள் என்ற பெயரில் ஸ்டார் பட்டனை அழுத்த சொல்லி லூட் அடிக்கிறார்கள்.இதில் நம் காசை எவன் கொள்ளை அடிக்கிறான் என்ரே தெரியவில்லை. எந்த service provider ஐ கேட்டாலும் நோ ரிப்ளை.இதை விட கொடுமை,cell one (BSNL) எப்போதும் எல்லா இடதிலும் 365 நாட்களும்
tower கிடைக்காது.ஹலோ சென்னாலே 50 பைசா கட் ஆகிவிடும்.
இந்த service provider கள் பணம் உறிஞ்சும் அட்டைகள்

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை