Wednesday, May 25, 2011

ஓட்டுனரின் இதய செயல்பாடுகளை கண்காணிக்கக்கூடிய வாகன இருக்கை

ஓட்டுனரின் இதய செயல்பாடுகளை கண்காணிக்கக்கூடிய வாகன இருக்கைகளை தமது Prototype வாகனத் தயாரிப்புக்களில் பயன்படுத்த ஃபோர்ட் மோட்டார் கம்பெனி தயாராகிக்கொண்டு உள்ளது.
ஃபோர்ட் மோட்டார் கம்பெனியானது கென்றி ஃபோர்ட் என்பவரால் 1903 இல் நிறுவப்பட்ட அமெரிக்க கம்பெனியாகும். இதன் தயாரிப்புக்கள் உலகலாவிய ரீதியில் வரவேற்பு பெற்றவை.



தற்பொழுது இந் நிறுவனத்தின் Prototype கார் இருக்கைகளில் ஓட்டுனரின் இதய செயல்பாடுகளை கண்காணிக்கக்கூடிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.



இவ் இருக்கையில் உள்ள 6 Sensor களினால் ஓட்டுனரின் இதயத்துடிப்பு கண்காணிக்கப்பட்டு வரும். அத்தோடு அவரது இதய செயல்பாடுகள் ECG (Electro Cardio Graphy) மூலம் திரையிட்டு காட்டப்படும்.

ஓட்டுனர் மாரடைப்பு அல்லது அதோடு தொடர்புடைய பாதிப்புக்கு உள்ளாகும்போது அத் தகவல் காரின் பாதுகாப்பு முறைமைக்கு அனுப்பப்பட்டு, அம்முறைமையால் தற்காப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உலகில் 23% விபத்துக்கள் ஓட்டுனரின் இதய பாதிப்பினாலே இடம்பெறுகிறது. இக் கண்டுபிடிப்பின் மூலம் இக் குறைபாட்டை நிவர்த்தி செய்துகொள்ள முடியும்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை