Thursday, May 19, 2011

குட்டைப்பாவாடையோடு அலையும் யாழ்ப்பாண பெ(க)ட்டைகள்


"அய்யோ, எப்பதான் எங்களுக்கு இந்த வெல்க்கம் பார்ட்டி முடியுமோ, அப்பதான் இந்த ராக்கிங் தொல்லைல இருந்து தப்பலாம்...", இது ஒரு கம்பஸ் பெட்டையோட புலம்பல்.

என்னடா, பிள்ளைகள் படிக்கப்போற இடத்தில இப்பிடி தொல்லை பண்ணுறாங்களே எண்டு தானே யோசிக்கிறீங்க, நடந்தத கேளுங்க,
ராக்கிங் என்னென்டா, கம்பஸ்க்கு புதுசா பிள்ளைகள் எடுபட்டு ஒரு மாதம் கழிய தான் வெல்கம் பார்ட்டி நடக்குமாம். அதுவரைக்கும் அவையள் முளங்கால் தெரிய பாவடை போடஏலாதாம். முளுப்பாவாடை தானாம் போடவேணும். இது அவாவுக்கு கஸ்டமா இருக்குதாம்.

நான் எங்கட சூப்பர் ஸ்டார் ரஜினியோட "சிவாஜி" பார்க்க யாழ்ப்பாணம் மனோகரா தியேட்டருக்கு போனனான். அதில ரஜினிக்கு விவேக் சொல்லுவாரு, "நல்ல பொண்ணு வேணுமெண்டா யாழ்ப்பாணம் தான் போகவேணும்" எண்டு. அத கேட்டதும் தியேட்டரே சிரிப்பால அதிர்ந்தது. யாழ்ப்பாணப் பெட்டைகளிண்ட வண்டவாளம் விவேக் ஐயாக்கு எப்படி தெரிய போகுது...

ஏண்டா இந்த பெட்டைகள் அருமையான சேலை இருக்க கறுமாந்திரம் பிடிச்ச குட்டைப் பாவாடைகளை போடுராளவைனு பார்த்தா, அரை தொடை தெரிய பாவடைய போட்டா பெடியளின்ட கண் கீழே தானே பார்க்கும், அதால அவளவையின்ட ரிங்கரிங், பெயின்டிங் செய்த மூஞ்சி அம்பலமாகாதுனு தான் இப்பிடி போடுராளவை எண்டு என்னோட படிச்ச விஞ்ஞானிகளின்ட ஆராட்சி முடிவு சொல்லுது.

முழங்கால் தெரிய பாவாடை போட்டா அது "மினி ஸ்கேர்ட்" , அரை தொடை தெரிய போட்டா அது "மைக்ரோ ஸ்கேர்ட்"

நான் இப்ப சொல்லுறன் குறிச்சு வச்சிருங்கோ, இன்னும் கொஞ்ச காலத்தில "நனோ ஸ்கேர்ட்" வரப்போகுது. அது ஒரு இஞ்சி  தானாம் உயரம், அதோட அதில முக்கால் இஞ்சிக்கு சைட்டில வெட்டு இருக்குதாம்....

நல்லூர் திருவிழாவில துலைஞ்சு திரும்ப கிடைச்ச மகன அப்பா கேட்டாராம், "உனக்கு சொன்னனான் எல்லோ சனக்கூட்டத்துக்குள்ள அம்மான்ட பாவடைய பிடிச்சுக்கொண்டு போ எண்டு" என்றாராம், அதுக்கு மகன் சொன்னானாம், "நானும் அம்மான்ட பாவாடைய பிடிக்க எட்டி... எட்டி.. பார்த்தன், ஆனா எட்டவே இல்ல அப்பா" என்டானாம்.

இப்பிடி கன்னிப் பெட்டைகள், கன்னி கழிஞ்சு காலாவதியான பெட்டைகள் எண்டு வித்தியாசம் தெரியாம எல்லாம் ஒரே மாதிரி தான் அலையுதுகள்.

இப்ப புதுக்கொடுமை ஒன்டு உலாவருகுது, முளங்கால் வரைக்கும் பிட் சோர்ட்ஸ் போட்டு அதுக்கு மேல அரை அடியில பாவடைய போட்டு தொங்கி... தொங்கி... திரியிறது. சத்தியமா படங்களில வார கரகாட்டக்காறிகள் போலவே இருக்கிறாளவை...

எல்லா குட்டைப்பவாடை போடுற பெட்டைகளுக்கும் ஒண்டேஒண்டு சொல்லிக்கொள்ளுறன், நீங்கள் கட்டைப்பாவாடை போட்டு கவர்ச்சியா திரிஞ்சா பார்ப்பம், பின்னால வருவம். ஆனா கல்யாணம் குடும்பம் எண்டு வரேக்க எங்களுக்கு குருடோ... முடமோ... புடவை தான் வேணும். அத புரிஞ்சு நடந்து கொள்ளுங்கோ...!

பின் குறிப்பு: இதில் சித்தரிக்கப்பட்டுள்ளவர்கள் தன்னிலை மறந்த சில வேடிக்கை பெண்களே. பெரும்பாண்மையில் விருந்தோம்பல், கண்ணியம், கன்னியம் என்பவையே எம் பெண்களின் கண்கள். அவையே நம் தமிழ் இனத்தின் அடையாளம்.


2 comments:

cisco said...
This comment has been removed by a blog administrator.
admin said...

உங்கட பின்னூட்டத்துக்கு நன்றி சிஸ்கோ

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை