ஆஸ்திரிய ஆராய்ச்சி நிறுவனமான IAT21 ஜெட் இயந்திர தொழில்நுட்பத்தை இணைத்து சுழலி(rotor) இல்லாத ஓர் வகை விமானத்தை D-Dalus எனப் பெயரிட்டு பாரிஸ் விமான கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளது. விமானத்தின் உந்துவிசைக்காக இயந்திரமுறையில் பொருத்தப்பட்ட நான்கு உருளை விசையாளிகளை (Cylindrial Turbines) ஐ பயன்படுத்தியுள்ளார்கள்.
விமானத்தின் Blade களின் கோணத்தை மாற்றுவதன் மூலம் விமான இயக்கத்திசையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
இவ் விமானத்தின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், இவ் விமானம் பறப்பதற்கு பிரத்தியோக ஓடுதளம் தேவையில்லை. நின்ற இடத்தில் இருந்தே மேல் நோக்கி நிலைக்குத்தாக பறக்க இயலும். கட்டடங்களுக்குள் செலுத்தமுடியும். அத்தோடு நிலைக்குத்தாகவே கீழ்நோக்கி இறக்கவும் முடியும். இதனால் கப்பல் தளங்களில் இலகுவாக கையாளளாம்.
இவ் விமானங்கள் எமக்கு பறக்கும் தட்டுக்களை நினைவுபடுத்துகின்றன. இவ்வகை விமானங்களை இராணுவ நடவடிக்கைகளுக்கும், மீட்பு நடவடிக்கைகளுக்கும் சுலபமாகப் பயன்படுத்தலாம்.
பராமரிப்பு அதிகம் தேவைப்படும் இவ்வகை விமானங்களின் தயாரிப்புக்கும், பாவனைக்கும் அதிகம் செலவாகின்றமை விஞ்ஞானிகளின் இன்றைய சவாலாக உள்ளது.
No comments:
Post a Comment