Monday, July 18, 2011

வலைப்பதிவரான ஒளவையார் முருகனோடு ஸ்கைப்பில் அலவுலாவிய போது...!!!

Skype இல் உலா வந்த ஒளவையார் அங்கே முருகப்பெருமானை சந்திக்கிறார்.


முருகன்: 
செந்தமிழ் சொல்லெடுத்து அழகுற பிளாக்கரில் தொகுத்தளிக்கும் ஒளவையே! அரியது எது??


ஒளவை: 
அரியது கேட்பின் வரிவடிவேலோன்,
அரிது அரிது செந்தமிழில் பதிவிடுதல் அரிது ! 
செந்தமிழ் ஆயினும் எழுத்துப்பிழையற பதிவிடுதல் அரிது! 

எழுத்துப் பிழையறப் பதியினும் அதற்கு கவர்ச்சியாய் பெயரிடுதல் அரிது!! 
கவர்ச்சிப் பெயரிடினும் வாசகர்களை கடுப்பாக்காமல் இருத்தல் அரிது!! 
கடுப்பாகாமல் இருப்பினும் வாசகர்கள் பின்னூட்டமளித்தல் அரிது !!

முருகன்:
அரியது கேட்டமைக்கு அழகாக தமிழிலில் விளக்கம் தந்த முதாட்டியே! கொடியது என்ன ??...

ஒளவை:
கொடியது கேட்பின் வரிவடிவேல்லோன்,
கொடிது கொடிது எம் பதிவை வேறோருவன் திருடுவது கொடிது !!
அதனிலும் கொடிது திருடியவன் அதிக Hits பெறல் !!
அதனிலும் கொடிது அலெஸ்சா ராங்கில் அவன் எம்மை புறம்தள்ளிவிடல்!!


முருகன்:
அவ்வையே!! உலகப் பதிவர்கள் உந்தன் வார்த்தைக்கு அடிமையாகி விடுவர் என்றால் அதில் வியப்பில்லை!! இனியது என்ன??

ஒளவை:
இனியது கேட்கின் தனி நெடு வேலோய்
இனிது! இனிது! திரட்டி இனிது !!
அதனிலும் இனிது தமிழ்மணம் !!
அதனிலும் இனிது தமிழ் 10 !!
அதனிலும் இனிது தமிழ் இன்ட்லி தானே !!


முருகன்:
அரியது , கொடியது , இனியது அனைத்திற்கும் உரையோடு விடைவு கண்ட அவ்வையே !!
புதியது என்ன??

ஒளவை:
என்றும் புதியது !! கூகுல் குறோம் என்றும் புதியது !!
பயன் நிறைந்த குறோம் என்றும் புதியது !!



முருகன்:ஸப்பா! இப்பவே கண்ணை கட்டுதே.....!!! ஒளவையே பேஸ்புக்கில் நான் உலவலாவ இருப்பதால் நான் சென்றுவருகிறேன்.


ஒளவை:
முருகா எனது வலைப்பூவில் மறக்காமல் பின்னூட்டம் இட்டுவிட்டு சென்றுவிடு...!!!

2 comments:

Jayakumar Chandrasekaran said...

மிக நன்றாக இருந்தது. கொஞ்சம் கூடுதல் எழுதியிருக்கலாம்

admin said...

நன்றி JK
ஒளவையின் பாடலில் தெரிந்தது இவ்வளவு மட்டும் தான் நண்பா...!!!

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை