Sunday, July 24, 2011

நான் பெட்டையாக பிறந்திருக்கலாம்...!!!

ஆணாய் பிறத்தலின் அருமை பற்றி ஒளவையாரே பாடியிருக்கும் நிலையில் அரிய ஆண் பிறப்பெய்திய எம்மை 'நான் பெண்ணா பிறந்திருந்தா நல்லம் போல' என்று எண்ணவைக்கும் தருணங்கள் சில உண்டு. அதைப்பற்றிய வேடிக்கையான ஓர் பதிவே இது. இத் தருணங்கள் உங்களுக்கும் சிலவேளை ஏற்பட்டிருக்கக்கூடும்.


01. ரவுனில டென்னிம் ஜீன்ஸ் வாங்கப்போய், கடைக்காறன் 2000 க்கு மேல விலை சொல்லி, சீச்சீ இந்த டெனிம் புளிக்கும் என்டு சொல்லிக்கொண்டு வெளில வரும்போது, நடைபாதை வியாபாரி 'குட்டைப்பாவாடை,  ரீசேட் 200 ரூபாய்' என கூவி கூவி விற்கும் போது...

02. நல்லூர் முருகன் ஆலயத்துக்கு செல்லும் போது 'ஆண்கள் டீசேர்ட், பனியன் முதலியவற்றை களைந்து உள்ளே செல்லவும்' என்ற அறிவிப்பை பார்க்கும்போது...

03. பெண் அரச ஊழியர்களுக்கு பிரசவ காலத்தில் சம்பளத்துடன் கூடிய 6 மாத கால விடுமுறையும், மேலும் 6 மாதங்களுக்கு பாலூட்ட அரை நாள் விடுமுறையும் அளிக்கப்படும் போது...

04. அரச ஊழியர்களுக்கான தேர்தல் கடமையில் வாக்குச்சாவடியில் பெண் ஊழியர்கள் தங்கத்தேவையில்லை என்பதால் அவர்கள் வீடுகளுக்கு சென்றுவிட பரிதாப ஆண்மகனாய் கொசுக்கடியில் புழுதிபடிந்த பாடசாலை மேசையில் தூக்கம் வராமல் புரளும் போது...

05. சங்கக்கடையில கியூவில நிக்கேக்க பண்னி மனேச்சர் அழகான பொம்பிள பிள்ளைகளை கூப்பிட்டு 'பாவம் பிள்ளை கனநேரம் வரிசயில நிக்கிறா' என்டு வழிஞ்சுகொண்டு சாமான் கொடுத்து அனுப்பும்போது...

06. A/L பெயில் என்டவுடன 'வெட்டியா வீட்ட தானே இருக்கிறாய்... போய் மில்லில அரிசி அரைச்சுக்கொண்டு வா' என்டு பறி ஒன்டை தந்து துரத்தும் போது, சோபாவில் ஹாயாக இருந்துகொண்டு O/L கூட பெயிலான தங்கை சன் மியூசிக் பார்க்கும் போது...

அன்பு வாசகர்களே! உங்களுக்கு வேறு ஏதவாது ஆதங்கங்கள் இருப்பில் மறக்காமல் பின்னூட்டத்தில் இட்டு செல்லுங்கள்.


2 comments:

இராஜராஜேஸ்வரி said...

எப்போதும் அக்கரைப் பச்சைதானே.ஆதங்கம் ஆ..தங்கம்..தான்...

admin said...

அது சரிதான், நீங்களும் ஆணாய் பிறந்திருக்கலாம் என்று வருத்தப்பட்டிருக்கிறீங்க போல...

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை