Thursday, July 28, 2011

கூகுலின் படம் மூலமான தேடுதல் - படங்கள், வீடியோக்கள் இணைப்பில்

ஓர் படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமன் என்பது போல கூகுல் தனது படம் மூலமான தேடுதல் வசதியை ஆரம்பித்து வைத்துள்ளது. படம் மூலமான தேடுதல் என்பது வழமையில் நாம் வார்த்தை ஒன்றை கூகுலில் தேடுவதாயின் கூகுல் அவ் வார்த்தை அடங்கிய பதிவுகளை தேடி கண்டுபிடிக்கும். அதேபோல் படம்மூலமான தேடுதலில் எம்மால் அளிக்கப்படும் புகைப்படங்கள் அடங்கிய பதிவுகளை தேடி கண்டுபிடிக்கும்.


இவ் வசதியை  images.google.com முகவரிக்கு சென்று பயன்படுத்திப் பார்கலாம். நான்கு முறைகளில் படம் மூலமான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.




01. Drag and drop (இழுத்தல் மற்றும் வீழ்ச்சி) முறை
தேடுதல் பெட்டியில் தேடவிரும்பும் படத்தை Drag and drop முறையில் இழுத்து விடுவதன் மூலம் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.


02. Upload an image (படத்தை பதிவேற்றும் முறை)
தேடவேண்டிய படத்தை கூகுலில் பதிவேற்றுவதன் மூலம் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளலாம்
(இது நேரத்தை வீணடிக்கக்கூடியது என்பதை கவனத்தில் கொள்க)


03. Copy and paste the URL for an image ( படத்தின் URL ஐ தேடுதல் பெட்டியில் ஒட்டுவதன் மூலம்
தேடவேண்டிய படத்தில் Right Click செய்து copy Image url Option ஐ தெரிவுசெய்து, அதனை தேடுதல் பெட்டியில் உள்ள பிரத்தியோக அடையாளத்தை தேர்வுசெய்து தோன்றும் பெட்டியில் ஒட்டுவதன் மூலம் தேடலாம்.


04. பிரத்தியோக நீட்சியைப் பயன்படுத்துவதன் மூலம்
கூகுல் தனது படம் மூலமான தேடுதலுக்காக Chrome, Firefox ஆகிய உலவிகளுக்கான தயாரித்துள்ள பிரத்தியோக நீட்சிகளை பயன்படுத்துவதன் மூலம் தேடவேன்டிய படத்தில் Right Click செய்து அதிலே தேடுதல் Option ஐ தெரிவு செய்வதன் மூலம் தேடிக்கொள்ளலாம்.


படம் மூலம் தேடுதல் தொடர்பாக கூகுலால் வெளியிடப்பட்ட Video கீழே இணைக்கப்பட்டுள்ளது.





இத் தேடுதல் நடவடிக்கைக்காக கூகுல் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை காட்டும் Video கீழே இணைக்கப்பட்டுள்ளது.






3 comments:

இராஜராஜேஸ்வரி said...

வியப்பளித்த பகிர்வுக்குப் பாரட்டுக்கள்.

admin said...

உங்கள் ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி...!

Anonymous said...

அருமையான பதிவு... நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை