அதன்பிறகு அவற்றிற்கான முக்கியத்துவம் குறைவடைந்து நவீன ஓவியங்கள் என கிறுக்கல்கள் மவுசை தட்டிக்கொண்டன. அர்த்தம் இன்றி வரைந்தவற்றிற்கு விரும்பியபடி பல அர்த்தங்களை சுமத்தி பண்பாட்டை சோபை இழக்கச்செய்தன.
கமல்காசனும் பிரபுதேவாவும் இணைந்து நடித்த ஓர் திரைப்படத்தில் நவீன ஓவியத்தை மறைமுகமாக கிண்டலடித்து இருப்பார்கள். அது தான் நிதர்சனம்.
பல விமர்சனங்களுக்கு மத்தியில் நாகரீக மற்றம் வேண்டும் என்று குறையாடை தரித்தவர்களால் நவீன ஓவியங்கள் பிரபலமாக்கப்பட்டது தான் உண்மை.
கொடுமையின் அடுத்தகட்டமாக கணினி உதவியுடனான ஓவியங்கள் தற்பொழுது மவுசை தக்கவைத்துக்கொள்ள தொடங்கிவிட்டன.
கமெரா மூலம் எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படங்களின் சிறு பகுதிகள் கணினி பிரத்தியோக மென்பொருட்கள் மூலம் ஓவிய பாணியில் திருத்தியமைக்கப்பட்டு ஓவியங்களாக வெளிவிடப்படுகின்றன.
அவற்றிற்கு சில உதாரணங்களை கீழே இணைத்துள்ளேன்.
பண்பாட்டை சிதைப்பது எவ்வகையிலும் முறையாகாது.
No comments:
Post a Comment