Thursday, July 7, 2011

Google + இலக்கை அடையுமா...??? பாதியில் உடையுமா...???

இணையத்தில் அனைத்திலும் ஜாம்பவானாக திகழ்ந்த Google க்கு சமூக வலையமைப்பு என்ற விடயத்தில் பாரிய பின்னடைவு காணப்பட்டது. Google ஆல் Orcut, Google Buzz என பல வழிகளில் தீர்வுகள் முன்வைக்கபட்ட போதும் அவற்றால் இலக்கை எட்ட முடியவில்லை. காரணம் பேஸ்புக்கின் போட்டியாகும். குறுகிய காலத்தில் பல பில்லியன் வாடிக்கையாளர்களை குவித்தது பேஸ்புக் இன் சாதனையாகும். பல ஆய்வுக்களுக்கு பின்னர் கூகுல் Google + ஐ அறிமுகப்படுத்தி பரிசாதனை ரீதியாக பாவனைக்கு விட்டுள்ளது.

Google + பற்றிய ஓர் அறிமுக Video



google + இல் Circle எனும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Circles என்பது கூகிள்+ இல் இருக்கும் நண்பர்களை எமக்கு விரும்பியவாறு குழுக்களாக்குவது. இவ்வாறு குழுக்களாக்குவதன் மூலம் எமது வலையமைப்பினை பராமரிப்பது மிக இலகுவாகின்றது. உதாரணமாக குறிப்பிட்ட ஒரு வட்டத்தினர்க்கு மட்டும் குறிப்பிட்ட செய்தியையோ கோப்பையோ பரிமாற முடியும்.





மேலதிகமாக Hangouts எனும் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. Hangouts என்பது Video chatting வசதியினைக்குறிக்கும். குறிப்பிட்ட ஒரு குழுவுடன் வீடியோ சட்டிங் செய்யும் வசதியாகும். இதன் எதிரொலியாகவே Facebook அவசர அவசரமாக தனது Video Chatting ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.





அத்தோடு Sparks எனும் எமது விருப்பங்களை பட்டியல்படுத்திவைக்கும் வசதி, Huddle எனும் மொபைல் மூலமான ஒரு group messaging வசதி என்பவற்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது.


தற்பொழுது குறிப்பிட்ட பாவனையாளர்களுக்கு மட்டுமே பரீட்சார்த்த ரீதியாக வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வசதி கொண்ட Gmail கணக்குகள் சில இணைய வியாபாரிகளால் eBay போன்ற தளங்களில் 0.01$ முதல் 99.99$ வரையிலும் ஏலம் விடப்படுகின்றன.


Google + ஆனது Social Networking இல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் என்பது பொதுவான ஓர் எதிர்பார்ப்பாகும்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை