நாம் கடைகளில் சென்று ஆடைகளை வாங்கும் போது அது நமக்கு சரியான அளவில் இருக்கிறதா, அவ் ஆடையின் வடிவம் நமது உடலமைப்புக்கு பொருத்தமாக இருக்கின்றதா என்று அறிய Fit Room சென்று அணிந்து பார்த்து வாங்குவது வழமை. தற்போதைய அவசர உலகில் Online Business வளர்ந்துவிட்ட நிலையில் இணையம் மூலம் பொருட்களை வாங்குவது பிரபலமாகி வருகின்றது. அதன் போது நாம் கணினி மூலமே உடைகளை Virtual (மெய்நிகர்) முறையில் உடுத்திப் பார்க்க உதவுவதே இந்த Virtual Dressing Room.
Kinect இன் இத் தொழில்நுட்பம் மூலம் நாம் குறித்த அவதானிப்பான்கள் (Sensor) பொருத்தப்பட்ட கணினி உதவியுடன் நாம் ஆடைகள் வாங்கப்போகும் கடை இணைய முகவரியில் LogOn செய்து அங்கு Digital முறையில் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை தெரிவுசெய்தால் போதும், திரையில் நாம் அவ் உடைகளை உடுத்தது போலவே விம்பம் தோன்றும்.
இதில் விசேஷம் என்னவென்றால், நாம் அசைந்தால், அவ் அசைவுகளுக்கேற்ப தெரிவுசெய்த ஆடையை அணிந்த விம்பமும் அசையும்.
No comments:
Post a Comment