Sunday, June 19, 2011

ஆசீர்வதிக்க வேண்டிய வாயால் சாபமிட்ட பூசகர்...!!! மக்கள் பீதியில்!!!

யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் உள்ள நெட்டிலிப் பிள்ளையார் கோயிலில் அண்மையில் கும்பாபிசேகம் நடைபெற்றது, அவ் விழாவையொட்டி மலர் ஒன்று வெளியிடப்பட்டது. அம் மலருக்காக முன்னாள் நீதிபதி ஒருவர் 'சைவத் திருத்தலங்கள் அன்றும் இன்றும்' எனும் தலைப்பில் ஆக்கம் ஒன்றை எழுதி இருந்தார். அவ்வாக்கத்தில் இன்றைய பூசகர்களின் நடவடிக்கை பற்றிய அவரின் விமர்சனத்துக்கே குறித்த கோயில் பூசகரால் கடுமையான சாபம் விடப்பட்டுள்ளது.


குறித்த கட்டுறையில் 'பூசகர்கள் மோட்டார் சைக்கிள்களில் வந்திறங்கி கால்கள் கூடக்  கழுவாது ஆலய கருவறைக்குள் சென்று நின்ற நிலையில் விளக்கைக் காட்டிவிட்டு ஒரு சில விநாடிகளில் ஓடும் காலம் அன்று இருந்ததில்லை. வேதம் ஓதிய வேதியர் அதற்கேற்ற வகையில் வாழ்ந்து காட்டிய வரலாறு இன்று பொய்யாய்ப் புனைகதையாப் போயிற்று. தேதம் ஓதிய வேதியர்க்கு ஓர் மழை இன்று பொய்த்துப் போய்விட்டது. இதனால் மக்கள் மத்தியில் பக்தி ஒரு மாயை போல் ஆகிவிட்டது' என எழுதி இருந்தார்.

இதனால் சினத்துக்கு ஆளாகிய பூசகர் ஒலிபெருக்கியில் கீழ் உள்ளவாறு சாபமிட்டுள்ளார்.


'கும்பாபிசேக மலருக்குப் பொறுப்பானவர்கள் எல்லோரும் அழிந்து போவார்கள், நாசமாய்ப் போவார்கள். இந்த மலர்களை வைத்திருப்பவர்களுக்கு சர்வ நாசம் உண்டாகும். மலரை வைத்திருப்பவர்கள் உடனே கோவில் கொண்டு வந்து மலரை ஒப்படைக்க வேண்டும்'


இதனால் அவ்வூர் மக்கள் மனவுளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதோடு பீதியுடனும் காணப்படுகின்றனர். எழுதியவருக்கு சாபமிடால் கூட ஓரளவுக்கு பரவாயில்லை. அப்பாவி மக்களுக்கு சாபமிட்டதில் என்ன நியாயம் இருக்கிறது...!!!


**********************************************************


மேலுள்ள ஆக்கத்தில் இடம்பெற்றிருக்கும் பூசகரின் படம் சித்தரிக்கப்பட்ட ஒன்று. அப்படத்தில் உள்ளவரை பற்றியும் சுவாரஸ்யமான செய்தி உள்ளது. இவர் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட முன்னாள் பூசகர் ஆவார். அவுஸ்திரேலியாவில் உள்ள கோவில் ஒன்றில் கடமையாற்றிய இவர் தன்னிடம் இராசி பலன் கேட்கவந்த பெண்ணை தவறான முறையில் தொட்டுப்பார்த்துள்ளார். இன்னுமோர் பெண்ணை முத்தமிட முயற்சித்துள்ளார்.


இவ் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இவருக்கு 18 மாத சிறைத்தண்டனை கிடைத்துள்ளது. இலங்கைக்கு நாடுகடத்தப்படவும் சாத்தியம் உள்ளது.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை