இந்தவாய்ப்பு எனக்கும் கிடைத்துவிட்டது. அதை பயன்படுத்தும்போது எனது அனுபவங்கள், நிறைவேறிய நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள் என்பவற்றை இப்பதிவின் மூலம் பகிர உள்ளேன்.
கவர்ச்சிக்கு பஞ்சமில்லதவாறும், நாம் தொடரும் ஏனைய பதிவர்களின் பதிவுகள் தனியாக ஓர் வலைத்தளத்தில் பிரசிரிக்கப்பட்டவை போல நமது டாஷ்போர்ட் இல் அடுக்கப்பட்டு இருக்கும்
Windos Xp இல் இருந்து Windows 7 க்கு மாறும் போது எவ்வாறானவொரு மனநிலை காணப்படுமோ அதே மனநிலை தான் புதிய Dashboard ஐ பார்க்கும் போது. நமது வலைத்தளத்தின் அடைவுகள், Blogger இன் புதிய அறிவிப்புக்கள் போன்றவை அழகாக காட்டப்பட்டிருக்கும்.
புதியதாக இடப்பட்டிருக்கும் பின்னூட்டங்களை நாம் இதுவரை பார்வையிடாமல் இருந்தால் அது பற்றிய அறிவிப்புக்களும் இடப்பட்டிருக்கும். மென்னிற பின்னனியில் மனதுக்கு ரம்மியமாய் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆனால்...!!!
இதில் உள்ள பாரிய குறைபாடு, இதிலே Edit Html option கொடுக்கப்படவில்லை. Design - Edit Html சென்று அடிக்கடி தளத்தின் Html கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனக்கு இது பெரிய ஏமாற்றமாய் இருந்தது.
இந்தக் குறைபாட்டுக்கு பதில் அளிக்கையில் Blogger இன் அபிவிருத்தி குழுவினர், இது பரீட்சார்த்தமாக பரீட்சிக்கப்படும் ஒன்று. Html கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினால் Template ஐ பதிவிறக்கி கணினியில் வைத்து வேண்டிய மாற்றங்களை செய்து மீண்டும் பதிவேற்றிக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு செய்வதால் நேரம் வீணடிக்கப்படுவதோடு செய்யப்பட்ட மாற்றங்களை preview முறையில் பார்வையிடவும் முடிவதில்லை.
பழையதே பொண் போன்றது என்பதுபோல பழைய dashboard ஏ பயன்படுத்த இலகுவானது எனலாம்.
2 comments:
Edit Html இல்லையென்றால் கொஞ்சம் கஷ்டம் தான்.
தங்கள் பகிர்வுக்கு நன்றி நண்பா! தமிழ் பதிவர்களில் புதிய dashboard-ஐ பெற்ற முதல் ஆள் நீங்கள் தான் என நினைக்கிறேன், வாழ்த்துக்கள்!
தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி அப்துல் பஷித்.
Post a Comment