Wednesday, June 22, 2011

Zeyaan இன் தலைப்பாகட்டு பிரியாணி 22-06-2011அன்புள்ள சகபதிவர்களே! வாசகர்களே!

இன்று முதல் வாரம் ஒருமுறை பலவிதமான தகவல்களை, அம்சங்களை தொகுத்து தரும் பகுதியாக 'தலைப்பாகட்டு பிரியாணி' வெளிவருகிறது. நான் ஒருமுறை தான் இந்தியா சென்றுள்ளேன். அங்கு என்னை வியக்க வைத்தவற்றில் தலைப்பாகட்டு பிரியாணியும் ஒன்று. அப்பெயரில் பதிவிடுவது தனி மகிழ்ச்சி. தங்கள் வரவேற்பும், ஆதரவும்தான் நான் வேண்டுவது. நன்றி!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

நீந்தும் என்டோஸ் கோப் - யப்பானிய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு

என்டோஸ் கோப் மனித வயிற்றினுள் உள்ள நோய்களை கண்டுபிடிப்பதற்கான கமெரா போன்ற சாதனமாகும், முன்னைய சாதனம் நீளமான ரப்பர் குழாயின் ஓர் முனையில் கமெரா பொருத்தப்பட்டிருக்கும். அக்குழாயை வாயினுள் செலுத்தி படம் பிடிப்பார்கள். அதனால் ஏற்படும் வேதனை கொடுமை. இரண்டு நாட்களுக்கு சாப்பிட முடியாது தொண்டை வலி வேறு.


இதற்கு தீர்வாக இப் புதிய நீந்தும் என்டோஸ்கோப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறய மருந்து வில்லை அளவில் இருக்கும் இது வயர்லெஸ் தொழில்நுட்பத்துடன் கூடியது. இதனை விழுங்கினால் போதும். அது தானாக வீடியோக்களை வெளியில் உள்ள கணினிக்கு அனுப்பத் தொடங்கிவிடும். joystrick மூலம் இதன் இயக்கத்தை கட்டுப்படுத்தலாம்.


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 யாழ்ப்பாணத்தில் மைனர் குஞ்சுகளுக்கு நடத்தப்பட்ட குடும்ப கட்டுப்பாட்டு அறுவைச்சிகிச்சை

முன்னைய நாட்களில் தெருவில் திரியும் கட்டாகாலி நாய்கள் யாழ்ப்பாண மாநகர சபையால் பிடிக்கப்பட்டு கொலை செய்யப்படும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்தபின்னர் மகிந்த சிந்தனையின் கீழ் நாய்களை கொலை செய்வது நிறுத்தப்பட்டது. இதனால் யாழ் நகரில் நாய்களின் தொல்லை அதிகமாகக் கணப்பட்டது.

நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் முதல்க்கட்டமாக  யாழ்ப்பாண ஆஸ்பத்திரி வளாகத்தில் கும்மியடித்த மைனர் குஞ்சுமணி நாய்களுக்கு ஆப்பரேசன் செய்யப்பட்டது. (எங்க னு கேக்கிறீங்களா??, அதுதான் சொன்னனே)

பி.கு: குடும்பக்கட்டுப்பாடு செய்த நாய்கள் தமக்கு அரிசி, பருப்பு வழங்கப்படவில்லை என் குறைபட்டு கொண்டன.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 மனதில் என்றும் இனிமையாக, எனக்கு மிகவும் பிடித்த பாடல் - இளையதளபதியின் பிறந்த நாளுக்காக...!!!^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கேட்டதில் பிடித்தது

அன்புள்ள அம்மா...!!!
நான் பசியென்று உணருமுன்பே உணர்ந்து
அமுதம் நீ தருவாய்...
நோய் வந்து விழும்போது, நீ விழுந்ததாய் துடித்து
மருந்தாகித் தேய்வாய்...
வழி ஒன்றும் இல்லய்யம்மா
என்கடன் தீர்ப்பதற்கு...!!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

நடிகர்களின் சேவைகள்

நடிகர் சூர்யா ஏழை மக்களுக்கு உதவிட மக்கள் இயக்கம் ஒன்றை ஆரம்பிக்க இருக்கிறார். (விஜய் இன் மக்கள் இயக்கத்துக்கு போட்டியாக ஆரம்பிக்கப்படுகிறதோ என பரவலாக சந்தேகம் எழுப்பப்படுகிறது)

நடிகர் விக்கிரம் 'விக்கிரம் பவுன்டேசன்' ' 'பசுமைப்புரட்சி' என்ற திட்டம் மூலம் பரவலாக மரங்களை நாட்டி வருகிறார்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

18 + மாத்திரம்

ஒருவர்: உங்க பையன் பேரு என்னங்க?

மற்றையவர்: கண்டம்ஸ் ராஜ்

ஒருவர்: ஏங்க இப்டியெல்லாம் பேரு வச்சிருகிறீங்க...???

மற்ரையவர்: அவன் அதையும் மீறி எல்லோ பிறந்தான்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை