Thursday, June 30, 2011

இனி அலுவலகத்தில் வேலை செய்தபடியே உடல் கட்டமைப்பைப் பேணலாம்

Hammacher Schlemmer நிறுவனத்தின் புதிய அறிமுகமே இந்த உடற்பயிற்சி இயந்திரம். மற்றைய பயிற்சி இயந்திரங்களைப் போலவே உடற்கட்டமைப்பை பேணுதலை நோக்கமாகக் கொண்ட இவ் இயந்திரத்தின் சிறப்பம்சம் நாம் வேலைத்தளங்களில் வேலை செய்தபடியே உடற்பயிற்சியிலும் ஈடுபடலாம்.


இவ் உடற்பயிற்சி இயந்திரம் அலுவலகப் பாவனைகளுக்கு ஏற்றவகையில் சொகுசு ஆசனத்தை கொண்டது. அத்தோடு 27 - 47 inch வரை அளவுமாற்றம் செய்யக்கூடிய மேசையையும் கொண்டது. இதில் சராசரியாக 136 kg வரையிலான பருமன் கொண்டவர்கள் வரை உற்கார முடியும்.



^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இலங்கையில் தரம் குறந்த பெற்றோல். உடனடி நடவடிக்கைக்கு உத்தரவு

தரம் குறைந்த பெற்றோல் விற்பனையின் காரணமாக வாகனங்கள் பல பழுதடைந்துள்ளமை குறித்து உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கனியவள அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த தரம் குறைந்த பெற்றோல் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற அனைத்து பிரதேசங்களிலும் பெற்றோல் மாதிரி பெறப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக கனியவள அமைச்சின் செயலாளர் டைடஸ் ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி 15 களஞ்சியசாலைகளில் இருந்து பெற்றோல் மாதிரிகள் பெறப்பட்டு அவை இரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவற்றில் 13 களஞ்சியசாலைகளின் பெற்றோல் மாதிரிகள் உரிய தரத்துடன் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் இரு பெற்றோல் மாதிரிகளுள் தரம் குறைவு அல்லது மாற்றங்கள் காணப்பட்டதாக பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது என அவர் கூறினார்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை