Friday, June 17, 2011

உலக மகா சீட்டிங் சம்பியன் ராஜ் டிவியின் மேம்படுத்தப்பட்ட ஏமாற்றும் நுட்பம்

 தமிழ் தொலைக்காட்சிகளின் சீட்டிங் சம்பியனாக விளங்கும் ராஜ் டிவி, இரவு 10.35 - 12.00 வரை 'சினிமா தெரியுமா' என்ற நிகழ்ச்சி நடாத்துவதன் மூலம் சீட்டிங் உலகில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. பல விமர்சனங்களுக்கு மத்தியில் தனது ஏமாற்று வேலையை நடாத்தி வந்த இத் தொலைக்காட்சி, தற்பொழுது ஏமாற்றுவதில் சில மேம்படுத்தல்களை ஏற்படுத்தியுள்ளது. தொலைபேசி அழைப்புக்கள் மூலம் பணம் பறிக்கும் அதே பழைய கருப்பொருளை மையமாக கொண்டு சிற்சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.
நான் கடந்த மாதமளவில் இவ் நிகழ்ச்சியை 'ராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டுமா...' எனும் தலைப்பில் விமர்சித்து இருந்தேன்.


கடந்த 15/06 இல் சனி உச்சம் காரணமாக மீண்டும் இந் நிகழ்ச்சியை பார்க்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.


தற்பொழுது இந் நிகழ்ச்சியில் என்னென்ன மாற்றங்கள் வந்துள்ளன என்று பார்ப்போம்.

அதே லேகியம் விற்கும் ஆங்கிளும், டிங்கரிங் பெயின்டிங் செய்த ஆண்(டி)ரி யும் தான், ஆனால் முந்தைய நிகழ்ச்சியில் இருவரும் தனித்தனியே நிற்பார்கள், தற்பொழுது இணைந்து நிற்கிறார்கள்.



முந்தைய நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி ஒருங்கமைப்பாளர்களே தொலைத்தொடர்பில் இணைந்து சம்மந்தம் இல்லாத பதில்களை சொல்வார்கள், தற்பொழுது தாமாக ரிங் செய்து இணைப்பை துண்டித்து விட்டு நேயர்களை குறைபட்டுக் கொள்வார்கள்.

தற்பொழுது நடிகர் நடிகைகளை அர்த்தநாரிகளாக இணைப்பதை விட்டுவிட்டு  அவர்களின் பாதி மூஞ்சியையும் அவர்களை பற்றிய குளு ஒன்றையும் சொல்வார்கள்.



ரஜினிகாந் இன் வாயை போட்டு குளுவாக 'இது எப்டி இருக்கு' என்ற வசனத்தை பேசியவர் யார் என்பார்கள், அஜித் இன் வாயை போட்டு விட்டு 'தமிழ் சினிமாவில் தல என்று அழைக்கப்படுபவர்' என்று குளு கொடுப்பார்கள்.



உண்மையா உலகிலேயே சகிப்புத்தன்மை கொண்ட இனம் னா அது தமிழ் இனம் தாங்க.....

2 comments:

கோவை நேரம் said...

http://kovaineram.blogspot.com/2011/03/blog-post_23.html
என்னோட ப்ளாக் ல இதப்பத்தி போட்டு இருக்கேன் .ஒருவேளை என்னை மாதிரியே பாதிக்கப்பட்டு இருப்பீங்களோ ...

admin said...

உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி கோவை நேரம்.
நான் இலங்கையில் இருப்பதால் நேரடியாக பாதிக்கப்படவில்லை, மன உளைச்சலுக்கு மிகவும் உள்ளாகி விட்டேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை