Monday, June 6, 2011

ZionEyez இன் வீடியோ தொழில்நுட்பம் உடைய மூக்குக்கண்ணாடி

ZionEyez பொறியியல் குழுமமானது அசையும் படங்களை பதிவுசெய்யக்கூடிய Eyez எனும் பெயரிடப்பட்ட மூக்குக்கண்ணாடியை தயாரித்துள்ளது. இக்கண்ணாடி மூலம் 720p HD தரத்திலான வீடியோக்களை பதிவு செய்ய முடியும். அத்தோடு கண்ணாடியினுள் பொருத்தப்பட்டுள்ள 8GB அளவிலான நினைவகத்தில் சேமித்துக்கொள்ளவும் முடியும்.
இதில் காணப்படும் Bluetooth, Micro USB மூலம் இவற்றை கணினியுடன் இணைத்து வீடியோக்களை கணினியில் தரவிறக்கிக் கொள்ளலாம்.



அத்தோடு இக் கண்ணாடிகளுக்கென பிரத்தியோகமாக உள்ள மென்பொருளை கணினியிலோ, கைத்தொலைபேசியிலோ நிறுவுவதன் மூலம் பதிவுசெய்யப்படும் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் உடனடியாக ஒளிபரப்பு (Broadcasting) செய்யவும் முடியும்.



பதுகாப்புக்காரணங்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் என்ற சிந்தனையைத்தூண்டினாலும், இக் கண்டுபிடிப்பு பாராட்டத்தக்கதாகும்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை