Wednesday, July 6, 2011

பேஸ்புக் மூலம் கொள்ளையடித்த யாழ் பூலான்தேவி - பாகம் II

பேஸ்புக் மூலம் புலம்பெயர்ந்த வாலிபர்களை ஏமாற்றி பணம் பறித்த யாழ்ப்பாண பெண் தர்ஷனா பற்றி ஏற்கனவே யாழ்ப்பாண பூலான் தேவியின் நூதன பேஸ்புக் கொள்ளை என்ற தலைப்பில் வெளியிட்டு இருந்தேன். தற்பொழுது தர்ஷனாவின் அண்ணன் சுதர்சன் என்பவர் அச் சம்பவம் தொடர்பில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.



தர்ஷனாவின் அண்ணா சுதர்ஷனின் மடலில் இருந்து...

நீங்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சில இணையத்தளத்தில் செய்திப்பக்கத்தில் போட்டிருந்த யாழ் யுவதி( கந்தையா தர்ஷனா ) பற்றிய செய்தி சம்பந்தமாக அறிந்திருப்பீர்கள். அந்த யுவதியின் அண்ணன் என்ற வகையில் சில முக்கிய விடயங்களை பகிர்ந்துகிள்ள நினைக்கிறேன். 


1 ) எந்த ஆதாரத்தினை வைத்து இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தார்கள்?

ஏனென்றால் jaffna நியூஸ், இணையத்தளத்திட்கு இந்த செய்தியை கொடுத்தவர் என்னுடன் 2 நாட்களுக்கு முன்னர் நேரில் சந்தித்து இந்த பிரச்சனையை என்னிடம் சொன்னார்.

அதாவது தான் அந்த யுவதிக்கு 15 லட்சம் இலங்கை காசு கொடுத்ததாகவும், தற்போது அந்த யுவதி எந்த தொடர்புமில்லாது இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதற்கு நான் சொன்னேன் நீங்கள் காசு கொடுக்கமுதல் என்னையோ எங்கள் குடும்பத்தையோ விசாரிக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இப்போ தொடர்பு துண்டிக்கப்பட்டவுடன் எங்களை தொடர்புகொள்ரிங்க என்று. நான் சொன்னது சரியா தவறா?
2 ) அவர் என்ன நோக்கத்திற்காக அந்த காசு கொடுத்ததென்று சொன்னாரெண்டு உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

அதாவது எனது தங்கையை எங்கள் குடும்பம் யாருக்கும் தெரியாமல் லண்டனுக்கு மாணவர் விசாவில் எடுப்பதற்காக அந்த காசை அனுப்பினாரெண்டு சொல்கிறார். அப்படியெண்டால் அவர் செய்த காரியம் சரியானதா?

எங்கள் குடும்பத்திற்கு தெரியாமல் அவர் யுவதியை லண்டனுக்கு எடுக்க முயற்சி செய்திருக்கிறார். அதை எங்களுக்கு தெரிந்து செய்ய முயற்சி செய்திருக்கலாமே?

3 ) இன்று எங்கள் வீட்டிற்கு cid பொலிசார் வந்து விசாரித்தார்கள். அவர்கள் commercial bank கணக்கை check பண்ணியபோது தங்கையின் கணக்கில் 10 லட்சத்துக்கும் குறைவான தொகையே இருந்திருக்கிறது.. எனவே குறித்த நபர் அந்த கணக்கிற்கு தான் 15 லட்சம் போட்டதாக எப்படி சொல்கிறார்.. மேலும் 1 கோடியே 40 லட்சம் அந்த கணக்கில் போடப்பட்டுள்ளதாக எப்படி அவர்கள் செய்தியில் போட முடிந்தது? அதற்குரிய ஆதாரம் அவர்களிடம் உள்ளதா? இல்லை ஏனெனில், அந்த கணக்கிலக்கத்தில் உள்ள காசு சம்பந்தமாக நீங்கள் சாவகச்சேரி cid போளிசரிடமோ அல்லது commercial bank மனகேரிடம் விசாரித்து பாருங்கள் உண்மை என்னவென்று உங்களுக்கு உங்களுக்கு தெரியவரும்.

4 ) நன்றாக ஆராயாது போட்ட இந்த செய்தியால் இன்று எங்கள் அம்மா, அப்பா ஏன் எங்கள் மொத்த குடும்பமுமே தற்கொலை செய்கிற எண்ணத்தில் மன உளைச்சலில் இருக்கின்றோம். ஒரு செய்தியை போடும்போது எல்லா பக்கமும் விசரித்திருக்கவேண்டும். எங்கள் அம்மா அப்பாவுக்கு எதாவது நடந்தால் அவர்களால் அவங்க உயிரை திருப்பி தர இயலுமா?

5 ) எதாவது தவறு நடந்திருந்தால் முதலில் வழக்கு போட்டு அதன்மூலம் குற்றம் நிருபிக்கப்பட்டவுடன் செய்தியை பிரசுரிப்பது வேறு விடயம். அனால் அவர்கள் உங்கள் செய்திப்பக்கத்தில் போட்டது சரியாவென சற்று சிந்தித்து பாருங்கள்.

ஒருவரின் தனிப்பட்ட காதல் தோல்விக்காக ஏன் அவர் இந்த செய்தியை போட்டிருக்ககூடாது. தனிப்பட்ட அவரின் பிரச்னையை அவர் இப்படி கேவலமான முறையில் செய்தியாக பயன்படுத்தி எங்கள் குடும்பத்தினை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறார்.

எனவே நீங்களாவது இந்த செய்தியை நன்கு விசாரித்து வெளிவிடவேண்டுமேன்று கேட்டு கொள்கிறேன்.

Kandiah Sutharsan
sutharszan@gmail.com

இவ்வாறு அவ் மடல் அமைகின்றது.




ஆனால் சுதர்சனால் குற்றம் சுமத்தப்பட்ட இணையதளம் 


இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் இலங்கையில் இருந்துகொண்டு தங்களை ஊடகவியலாளர்கள்/ வானொலி அறிவிப்பாளர்கள் என்று கூறிக் கொண்டு திரியும் சில இளைஞர்களைக் கொண்ட குழுவினரும் ஒரு தேர்ந்த மாபியா கும்பல் போல செயல்பட்டது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது... 

இவர்கள் தாங்கள் வேலை செய்யும் ஊடக நிறுவனங்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தியமையும் அம்பலத்துக்கு வந்துள்ளது...
இந்தச் சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் பற்றிய அனைத்து விபரங்கள் படங்கள் மற்றும் தகவல்களுடன் தமிழ் சி.என்.என் வசம் உள்ளது... தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பான விபரங்கள் வெளிவரும்... 



என தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.


சுதர்சன் என்பவர் சாவகச்சேரி இந்துவில் வர்த்தகப் பிரிவு 2002 ம் ஆண்டு உயர்தர மாணவர். அத்துடன் Advance Technical Institute in Sri Lanka இல் HNDM கற்றவர்.


எது என்னாறாயினும், மெய்ப்பொருள் காண்பது அறிவு.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை